Orographic rainfall - Paripadal

Published on 14 May 2026


Orographic Rainfall

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;

விளக்கம் 

கடலில் நீரை முகந்து சென்ற மேகம் உரசும்போது, தன்னிடமுள்ள நீர் தளும்பித் தாங்கமாட்டாமல் மழையாகப் பொழிந்தது.

Convectional Rainfall

திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி

விளக்கம் 

அலை மோதும் குளிந்த கடலில் செவ்விய முறையில் நீரை முகந்துகொண்டு மேலே சென்ற மேகம், இடி முழங்கி, நீரைத் தாங்கிக்கொண்டு செல்லமாட்டாமல், கரை உடைந்த குளம் போல, வானத்து வயிறு கிழியும்படி மழையாகப் பொழிந்து கொட்டியது. 

🏷️ Tags:
Orographic rainfallconvectional rainfall

📰 Related Articles