Published on 13 May 2026
அறிவியல் (science)
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளா ர்.
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.
- தொல்காப்பியம்
மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார் தொல்காப்பியர்.
திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கட ல்நீர்
நாழி முகவாது நால் நாழி
என ஔவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுசூழல் (Environment)
கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவம் (மெடிக்கல்)
போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.
- பதிற்றுப்பத்து
சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது.
கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்
- நற்றிணை
தொலைவில் உ ள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்
- திருவள்ளுவமாலை
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி...”
----புறநானூறு
புலவர்கள் புகழ்ந்து பாடும் அளவிற்கு நல்ல புகழ் பெற்றவர்கள், இந்த உலகத்தை விட்டு சென்றபின், யாராலும் இயக்கப்படாத தெய்வீகமான வானூர்தியில் (சொர்க்கத்திற்கு) செல்வார்கள்.
“அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ‘ஓர்
எந்திர வூர்தி இயற்றுமின்’ என்றான்.”
----சீவக சிந்தாமணி
வானில் பறக்கும் மாய வித்தைகளைப் பற்றிய நூல்களின் நுணுக்கங்களை அறிந்த வல்லமைமிக்க அரசன், சிறந்த தச்சனை அழைத்து, “ஒரு இயந்திரத்தால் இயங்கும் வானூர்தியை உருவாக்குங்கள்” என்று கூறினான்.