Tide - Nanneri nool

Published on 13 May 2026


நன்னெறி (நீதிநூல்)

இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே –
பொன்செய்
அதிர்வளையாய் பொங்கா(து) அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்கும் கடல்

- - சிவப்பிரகாச சுவாமிகள்

விளக்கம் 
பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.

🏷️ Tags:
Tide formationTide

📰 Related Articles