Published on 24 Apr 2026
ஒரு நாட்டின் வளம் , அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
-----------
நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை .
------------
"குழந்தை
வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது."
அதுபோல என் குழந்தைகள் வீட்டிற்கு ஒரு மரம் வைத்து, காடுகள் நிறைந்த ஒரு இந்திய சாம்ராஜ்யத்தை உருவாக்குவார்கள், அது நம்முடைய தமிழ்தாய் மண்ணிலே உருவெடுக்கும் தாய் தந்தையர்களே.
------------
வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும். காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன.
------------
உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை; இன்னொன்று ஆப்பிரிக்க யானை.ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை. ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
-----------
யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.
------------
யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றிற்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும். அதற்குக் குடிக்க அறுபத்தைந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
-------------
யானைகள் பொதுவாக மனிதர்களை த் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போதுதான் மனிதர்களை த் தாக்குகின்றன. மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.
--------------
கரடி ஓர் அனைத்துண்ணி. அது பழங்கள், தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும். உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல் ஆகியவற்றையும் தேடி உண்ணும். கறையான் அதற்கு மிகவும் பிடித்த உணவு.நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்.
-------------
புலி மனிதர்களை த் தாக்குவதில்லை. இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்டது.புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற பு லி க ள் அ ந்த எல்லைக்குள் செல்லாது.
கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும். அ ந்த க் கு ட் டி க ளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும்.
புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்று நாங்கள் கூறுவோம்.
--------------
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜாதவ்பயேங், பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர். ‘இந்தியாவின் வனமகன்’ என்று அழைக்கப்படுபவர்.
1979 ஆம் ஆண்டு ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. அவற்றில் பலதரப்பட்ட விலங்குகள் பாதிக்கப்பட்டன. மூங்கில்களைக் கொண்டு வந்து அங்கு வளர்த்தார்.
அந்த மாநிலத்தில் "சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம்" ஒன்று இயங்கி வந்தது அவற்றில் அவர் சேர்ந்துகொண்டார். அந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிட்டது. அவர் மட்டும் அங்கேயே தங்கி இருந்து அனைத்து மரக்கன்றுகளையும் பாதுகாத்து வந்தார். ஆனால் மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் வளரவில்லை.
அப்போதுதான் அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரை அணுகினார். அவர், 'மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டுமெனில் மண்ணின் தன்மையை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு மண்புழுக்கள் மட்டுமன்றிச் சிவப்புக் கட்டெறும்புகளும் உதவும்' என்று கூறினார்.
மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமே அதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளைக் கொண்டுவந்து அங்கே விடத்தொடங்கினார். கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லச் செல்ல மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. காடுகளில் ஆங்காங்கே பச்சைப் பசும்புற்கள் தலைகாட்டத் தொடங்கின. அதன் பின்பு அவர் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.
கால்நடைகள் வளர்ப்பதுதான் அவருடைய வேலை. அவற்றின் சாணத்தை ஒரு துளி கூட வீணாக்காமல் இயற்கை உரமாக உபயோகித்தார். ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை வீசி எறியாமல் விதையாகச் சேர்த்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன் விதைகளை எடுத்து இத்தீவில் தூவிவிடுவார். அதுதான் இன்று காடாக உருவாகியுள்ளது. ஆற்றின் கரையிலிருந்து தூரத்தில் உள்ள கன்றுகளை வளர்க்க ஒரு பானையை கொண்டு சொட்டுநீர் பாசனத்தின் மூலம் வளர்த்தார். இப்போது அங்கு பறவைகள், விலங்குகள், யானைகள், புலிகள், பாம்புகள், காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.
அவருக்கு 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ‘இந்திய வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.