Voters - Hitler

Published on 13 May 2026


ஒரு நாள்  ஹிட்லர் ஒரு கோழியுடன் அமைச்சரவைக் கூட்டத்துக்கு வந்தார்.

அந்த கோழியின் தலையை தனது கைக்குள் இறுக்கமாகப் பிடித்துக்  கொண்டிருந்தார்...! 

நடந்தபடியே, அந்த கோழியின் இறகுகளை ஒன்றொன்றாக பறிக்கத் தொடங்கினார்.

கோழி கடும் வேதனையில் அலறி, தப்பிக்க போராடியது. ஆனால் ஹிட்லர் அதை விடவில்லை. 

அதன் அலறல்களைக் கூட கவனிக்காமல் தொடர்ந்து இறகுகளை பறித்தார். 

அமைச்சரவையினர் அவரிடம் கூறினர். "பாவம் அந்த உயிரை இப்படி வதை செய்யாதீர்கள்..! அதை விட்டுவிடுங்கள்" என்று. 

ஆனால் ஹிட்லர் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. 

இறுதியில், கோழியின் அனைத்துப் இறகுகளையும் பறித்துவிட்டு, அதை தரையில் எறிந்தார். 

பின், தனது பாக்கெட்டில் இருந்த சில தானியங்களை எடுத்துக் கொண்டு, அந்த கோழிக்கு தின்ன கொடுக்கத் தொடங்கினார். 

அந்த நிலையில், உணவுக்காக தவித்துக் கொண்டிருந்த கோழி மீண்டும் ஹிட்லரின் கையை நீக்கி பார்த்தது. 

ஹிட்லர் அதை அருகே வர சொல்லி தானியங்களை காட்டினார். சில நேரத்திற்கு பிறகு, அந்தக் கோழி வந்து அவரின் அருகே அமர்ந்து, அந்த சிறிய தானியங்களை தின்ன தொடங்கியது. 

இதுவரை ஹிட்லரிடம் இருந்து தப்பிக்க போராடிக் கொண்டிருந்த அதே கோழி, இப்போது ஒரு கைப்பிடி தானியங்களாக மீண்டும் அவரின் அருகில் அமர்ந்தது. 

இதை கண்ட அமைச்சரைவினர் ஆச்சரியத்துடன் கேட்டனர். "இது என்ன என்று.?" 

அதற்கு ஹிட்லர் பதிலளித்தார்:
"வாக்காளர்களும் இப்படித்தான். நான்கரை ஆண்டு காலம் நாம் அவர்களின் இறகுகளை பறிக்கிறோம். பின்னர் கடைசி ஆறு மாதங்களில், சில தானியங்களை அவர்களிடம் தூக்கி எறிகிறோம்." 

"அந்தச் சில தானியன்களுக்காக,  நான்கரை ஆண்டுகாலம் நான் செய்த அநீதிகளை அவர்கள் மறந்து விடுகிறார்கள் மீண்டும் நமக்கே வாக்களிக்கிறார்கள்."

🏷️ Tags:
HitlerVotersElection

📰 Related Articles