Published on 14 May 2026
பணக்காரன் தனது காரில் சாலையில் சென்று கொண்டிருந்தான். அந்த காலம் மிகவும் கடினமான குளிர் காலம்....பனிமழை பொய்கிறது...
அந்த சாலையில் ஒரு பிச்சைக்காரன் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டான்.
பணக்காரன் நின்று கேட்டான் : "உன்னிடம் ஒரு போர்வை இல்லையா ?!"
பிச்சைக்காரன் சொன்னான் . "இல்லை "
பணக்காரன் சொன்னான் : "இங்கேயே காத்திரு. நான் உள்ளே போய் உனக்கு ஒரு போர்வை கொண்டுவருகிறேன்" என்று.
அந்த மனிதன் தனது வீட்டிற்குள் சென்றான். ஆனால் உள்ளே சென்றதும், தனது குழந்தைகள், செல்லப்பிராணிகள் ஆகியவற்றை பார்த்து குடும்பப் பொறுப்புகளிலும், இரவு உணவிலும் மூழ்கி போனான்.
அவன் சாப்பிட்டு, தூங்கிவிட்டான். வெளியே காத்திருந்த அந்த மனிதனை மறந்துவிட்டேன்.
காலை வந்தது. திடிரென்று பணக்காரனுக்கு நினைவுக்கு வந்தது. "ஐய்யோ! அந்த மனிதனுக்கு நான் வாக்கு கொடுத்தேனே !"
ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு ஓடினான்.
ஆனால் மிகவும் தாமதமாகிவிட்டது. பிச்சைக்காரன் இறந்து விட்டான்.
பல வருடங்கள் அவன் தனியாக குளிரை தாங்கி வாழ்ந்தான். ஆனால் உதவிக்காக காத்திருந்த அந்த ஒரு இரவில் தான் அவன் உயிரிழந்தான்.
அதுபோலதான் என் சொந்தகளும் - ஓட்டுக்கு காசும், இலவச திட்டங்கள், அறிவிப்புகளை நம்பி தனது வலிமையை இழந்து விடுகிறார்கள். பிறகு ஏமாற்றம் நிறைந்த அந்த கடுமையான வாழ்க்கையை வாழவும் கற்றுக்கொள்கிறார்கள்.
-------
பாடம் 1
"நீங்கள் செய்ய முடியாததை யாருக்கும் வாக்குறுதியாக கொடுக்காதீர்கள்."
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கிறது. நீங்கள் மறந்த ஒரு வாக்குறுதி, வேறொருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.
பாடம் 2 - நம்பிக்கையின் சிக்கல்
"அந்த மனிதன் தனது உள்ளுணர்வின் வலிமையால் உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் யாரையோ நம்பியபோது, தன்னைத் தானே`இழந்தான்."
யாரிடமும் முழுமையாக சார்ந்து விடாதீர்கள். அதிக சார்பு உங்கள் சொந்த மனவலிமையை பலவீனப்படுத்தும்."