Published on 28 May 2026
வேளாண்மை தொழில் அல்ல, அது ஒரு பண்பாடு, நம் கலாச்சாரம், நம் வாழ்வியல் முறை.
மதிப்பிற்குரிய அம்பேத்கர் கூறுகிறார் "வேளாண்மையை தேசியமயமாக்க வேண்டும்" என்று. அதைத்தான் நாம் தேசிய பணியாக்க வேண்டும் என்று அண்ணன் சீமான் கூறுகிறார்.
நம்மாழ்வார் கூறுகிறார் "வேளாண்மை தொழில் அல்ல, தம் தாய் நமக்கு பால் ஊட்டியது எப்படி தொழில் இல்லையோ, அதுபோல நமது பூமிதாய் உணவூட்டியதும் தொழில் இல்லை" என்று கூறுகிறார். அது குலத்தொழில் என்று சொல்லாதே....அது குலதெய்வத்தின் தொழில்
வேளாண்மையை விரும்பி செய்கிறவர்களையாவது வாழ வைப்பது நம்முடைய அறிவார்ந்த மேன்மக்களின் கடமை. அதை இழிவாக கருதுபவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பால் குடிக்காதீர்கள், வெண்ணை, கறி, காய்கள், கனிகள் ....
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்.
-----
ஏன் கோல்டு ஸ்டோரேஜ் கொண்டு வரமாட்டேங்குறாங்க, அது வந்தால் சிலர் பணம் சம்பாதிக்க முடியாது. hording செய்கிறார்கள். அப்போ விவசாயி தான் விளைய வாய்த்த அந்த பொன்மணிகளை விருப்பம் இல்லாமலும், சேகரித்து வைக்க முடியாமலும், கண்ணீருடன் தன்னை காக்கும் என்று கனவோடு இருந்த அரசிடம் ஒப்படைகிறான். ஒரு முறை விவசாயிடம் பேசிபார், பழகிப்பார் அவர்களுடைய கண்ணீரின் வலி புரியும். அப்படி புரிய வில்லை என்றாலும், அவர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் please
நாங்கள் வந்தால் அந்த கோல்டு ஸ்டோரேஜ் உருவாக்குவோம், அதற்கான விலை வரும்போது விற்றுக்கொள்ளட்டும்.
------
ஒரு ஏக்கர் பயிர் வைக்க ஆகும் செலவு
ஆள் கூலி -
எத்தனை ஆட்கள் தேவை -
உரத்தின் பங்கு -
உழவு செய்ய எவ்வளவு -
கலைபறிக்க எவ்வளவு -
அறுவடை செய்ய எவ்வளவு -
தண்ணீருக்கு எவ்வளவு -
எத்தனை மூட்டை விளையும் -
அவற்றின் விலை எவ்வளவு -
விவசாயின் லாபம் எவ்வளவு -
-----
ஒரு காணொளில வீரப்பன் சொல்வார்....சொத்து சுகம் உள்ளவன் , இவன் அத செய்வான் இத செய்வேன்னு சொல்லுவான்...அவன் எதையுமே செய்யமாட்டான்....என்னை மாதிரி பரதேசிக்கு ஓட்டுபோடுங்க, அவன் கண்டிப்பா செய்வான், ஏன்னா கஷ்டப்பட்டவன், நம்ம போலத்தான் அந்த மனிதர் இருப்பானென்று தெரியும்.
------
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும்
------
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” (புறநானூறு – 18)
பொருள்:
பசியால் வாடுபவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள், அவர்களுக்கு உயிரையே கொடுத்தவர்களாகக் கருதப்படுவர்.
-----
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
No tags available