Published on 29 May 2026
தொல்காப்பியர் , உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளா ர்.
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.
- தொல்காப்பியம்
உயிராக நான்
நமது இயக்கத்தையும் உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது காற்று.
திருமூலர் தம் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று
கூறியுள்ளார்.
பிற்கால ஔவையார் தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில் என்னை பற்றி கூறியுள்ளார்,
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்
– ஔவை குறள், 49
பல பெயர்களில் நான்
காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பருவநிலை,சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத் தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சுழல்காற்று, சூறாவளிக்காற் று எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
நான்கு திசையிலும் நான்
கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது நான் கொண்டல் எனப்படுகிறேன் . கொண்டலாக நான் குளிர்ச்சி தருகிறேன்; இன்பத்தைத் தருகிறேன் ; மழையைத் தருகிறேன்; கடல் பகுதிக்கு மேலுள்ள மழை மேகங்களைச் சுமந்துவருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன்.
மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்; மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன்; வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன்.
வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற் று எனப்படுகிறேன். நான் பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.
தெற்கிலிருந்து வீசும்போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்; மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறேன்.
No tags available