Organizational Structure of the Party

Published on 06 Jun 2026


இவ்வளவு நாட்கள் நம்முடைய இனத்திற்காகாவும் மொழிக்காகவும் போராடி இவ்வளவு தூரம் இந்த புரட்சி படையை வளர்த்து மேன்மையடைய செய்த என் அண்ணனுக்கும், அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்

ஏன் தமிழ் இனம், மொழி, இலக்கியம், பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் காக்கப்படவேண்டும் ?

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

மக்களுக்கு உள்ளுணர்வு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். அவ்வளவு மேன்மை பொருந்திய மக்கள்தான் தமிழ்மக்கள். 

"Inner wisdom springs from the mind, but the esteem with which the world regards a person is often influenced by the lineage they belong to. Endowed with such excellence and dignity are the Tamil people."

ஏன் நாம் ஒன்றிணைந்தோம் ?

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

நம்முடைய தமிழ் இனம், மொழி, பண்பாடு, பாரம்பரியம், இலக்கியம் இவற்றை காத்து மேன்மை அடைய செய்ய ஒரு புரட்சி படை இருக்கும்போது அதனுடன் சேர்ந்து செயலாற்றும்போது பெருமைதானே யொழிய சிறுமை அன்று

"Those who work with well-chosen associates, carefully analyze their course of action, and think before they act will find nothing impossible to achieve."

அதையேதான் Ratan Tata சொல்லியிருப்பார் 

If you want to walk fast, walk alone...

But, if you want to walk far, walk together...

------

சோர்வில்லாமல் உழைத்தல்

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை

"Even if lazy people are blessed with close access to a powerful ruler, they fail to make any meaningful or lasting use of that opportunity."

( நமக்குத்தான் நம்ம அண்ணன் பதவி கொடுத்துவிட்டாரே, என்று ஒரு அலட்சியம் கொள்ளாமல், ஒரு பெயரை அடைவதற்கு/வாங்குவதற்கு  எவ்வளவு கடினமாக உழைத்தோமோ, அதைவிட மிகக்கடினமாக உழைக்கவேண்டும் அந்த நற்பெயரை தக்கவைத்துக்கொள்ள. நமது இலக்கு தமிழ் தேசியத்தை மலரச்செய்வதுதான். )

ஒரு இனத்திற்காகவும், தத்துவ கோட்பாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்து அந்த தலைவருக்கு நாம் செய்யும் கடமை, நாம் செய்யவேண்டியவை மாசற்ற பங்களிப்பு 

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள்.

"Those who strive tirelessly and without weariness can overcome even adverse fate and make it retreat."

(நாம் இடைவிடாது, உழைப்பையும்/ முயற்சியையும் செலுத்துவோமானால், நம்மை சுற்றியுள்ள சதிகளை தலைதெறிக்க ஓடவிட முடியும்.)

தற்போதைய முதல்வர் சொல்கிறார் தாங்கமுடியாத சுமையை என்மீது சுமத்திவிட்டு சென்றுவிட்டார்கள் என்று, ஒரு ஆளுமை கொண்ட தலைவர் இவ்வாறு சொல்லமாட்டார்.

இங்கிலாந்துல் உள்ள corus இரும்பு உருக்கு தொழிற்சாலை நட்டத்தில் இயங்கிவந்தது, அது விற்பனைக்கும் வந்தது அப்போது டாட்டா அவருடைய நிறுவனத்தை விட நான்கு மடங்கு பெரிது, அந்த தொழிற்சாலையை வாங்கி அதனை லாபத்தில் இயங்கும் நிறுவனமாக உயிர்ப்பித்தார். அது ஆளுமை திறமையை வெளிக்காட்டுகிறது 

இப்ப என்னனா 1.5 கோடிமக்கள் அறியாமையில் உள்ளார்கள் அவர்களை மீட்டுஎடுக்க வேண்டும் என்ற சுமையும் நம் அண்ணன் மீது சுமத்திவிட்டார்கள். அந்த சுமையையும் நம்மால் மட்டுமே தாங்கமுடியும். அதனையே தான் வள்ளுவர் சொல்கிறார் 

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். 

தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான் 

"He who seeks not his own pleasure but the completion of the task he has undertaken becomes the pillar that supports his family and relieves their suffering."

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்

-------

இனிமையாக பேசுதல்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.

"People who speak kind and pleasant words that make everyone happy will find that even poverty, which deepens sorrow, loses its power over them."

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். 

கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும் 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 

‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 

தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.  

சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது, எவருக்குமே அருமையாகும்

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
 

குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள்

"The way you speak to others

becomes the world 

you live in" --Buddha

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. ----
திருமூலர்

"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை"

இறைவனுக்கு விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை.
ஒரு பச்சிலை (வெற்றிலை அல்லது எளிய இலை) கூட பக்தியுடன் சமர்ப்பித்தால் போதும்.
வழிபாட்டில் பொருளைவிட மனத் தூய்மையே முக்கியம்.

"யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை"

பசுவிற்கு ஒரு வாயளவு புல்லோ அல்லது தீவனமோ கொடுங்கள்.
எல்லா உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்பதே இதன் கருத்து.

"யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி"

நாம் உணவு உண்ணும் முன் அல்லது உண்ணும்போது, ஒரு கைப்பிடி உணவையாவது பசியால் வாடுபவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தானத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது.

"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே"

இனிமையான சொற்களைப் பேசுவது அனைவராலும் செய்யக்கூடிய மிகப் பெரிய அறம்.
அன்பான வார்த்தைகளுக்கு எந்தச் செலவும் இல்லை; ஆனால் அதன் பயன் அளவற்றது.

------

வாதத்தை சொல்லும் பொழுது எதிரியை 
உருவாக்காமல் சொல்லும் கலைதான் 
நுண்ணறிவு
 

-----ஐசக் நியூட்டன் 

"The art of presenting an argument without creating an enemy is true wisdom."

(எனக்கு அரசியல் புதிது, இருப்பினும் நான் ஒரு பொது மக்களாக இருந்து பார்க்கும்போது, நம்முடைய மதிப்பிற்கும் மேன்மைக்கும் உரிய சேனாதிபதிகள் பேசும் சில சொற்கள், இக்காலத்தில் இயல்பாக இருந்தாலும் கூட, அவை நம்மிடம் இல்லாமல் இருப்பதே சிறப்பான பண்பாக நான் கருதுகிறேன். இது யாரையும் புண்படுத்துவது என்பது எனது நோக்கமல்ல, sorry please )

ஏன் என்றால் ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் பேசியிருப்பார்கள்........ குறைகூறும் அந்த பெண்ணுடைய வாக்கு நமக்கு வேண்டாம், இருப்பினும் அதையும் நான் இழக்க தயாராக இல்லை, என் அன்பு சொந்தங்களுக்கும் அதே எண்ணம் இருக்கும் என்பதை நம்புகிறேன்.

அனைத்து தரப்பினரையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். சில வார்த்தைகள் வீர மறவர்களுக்கு பிடிக்கும், ஆனால் பெண்மைக்கு இனிமையான சொற்களே பிடிக்கும். so, lets we speak pleasant words. இங்கு இருக்கும் அனைவரும் என்னை விட வயதில் மூத்தவர்களும் இருப்பார்கள், இளையவர்களும் இருப்பார்கள், நான் சொல்வதை குறையாக கருதவேண்டாம். சரியாக இருந்தால் மாற்றிக்கொள்வோம்....

இப்போது எப்படி நமது மக்கள் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசும் வார்த்தைகளை உற்று நோக்குகிறார்களோ, அதுபோன்று நம்மையும் நோக்குவார்கள். முதலமைச்சர் அவர்கள் கூட "நல்லா வாயில வருது" "மற்றும் பல" "அல்லு சில்லு" "நான் என்ன ....." அவைகளே அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், யாரால் வளர்க்கப்பட்டார்கள் என்பதை காட்டுகிறது. )

அதைத்தான் வள்ளுவரும் சொல்கிறார்....

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 

நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்.

"The nature of the soil is revealed by the sprout that grows from it; likewise, a person's speech reveals the character of one born into a noble family."

-------

கட்சியின் மூத்த தலைவர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவேண்டும்,  

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
 

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

"No one can destroy a person who seeks the guidance and support of wise mentors who correct mistakes and offer sound advice."

அண்ணன் எப்போதும் ஓய்வில் இருப்பதில்லை, அண்ணனுடன் அத்தலைவர்கள் கலந்தாலோசித்து வழிநடத்துவார்கள்.

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை

-------

யாரிடம் ஒரு செயலை ஒப்படைக்க வேண்டும் 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். 

இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.

"After carefully considering that, for these reasons, this person is capable of completing the task, the work should be entrusted to him."

திறமை மிக்கவர்கள்தான் நம்முடைய கட்சியில் நிறைந்து இருக்கிறார்கள், இருப்பினும் நுணுக்கமான செயல் மேற்கொள்ளும் நுண்ணறிவாளர்கள்களை கண்டறியவேண்டும்  

(சில கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலில், தலைமை முழுவதும் மற்றவர்களை நம்பியதால்தான் சிலர் தோல்வியை தழுவினர். இன்னும் சொல்லப்போனால் எல்லா கட்சிகளும் கோட்டைவிட்டார்கள்.)

-------

நம்முடைய கடமைகள்

"நல்லதை நினைவுபடுத்திக் 
கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
கெட்டது தானே ஒட்டிக்கொண்டுவிடுகிறது "

"We have to keep reminding ourselves of the good, because the bad clings to us on its own."

(நம்முடைய தேர்தல் முத்திரையை மேடைகளில் அடிக்கடி நினைவு படுத்தும் வகையில் பேச வேண்டும்)

"மக்கள் ஒருபோதும் அறிவு தலைமையை தேடமாட்டார்கள், கவர்ச்சியை நோக்கித்தான் ஓடுவார்கள். கவர்ச்சியால் உருவாக்கப்பட்ட சமூகம், ஒருபோதும் அறிவு சமூகத்தை படைக்காது" ஹிட்லர் சொல்லியிருந்தாலும், அதை அண்ணன் சொன்னதால்தான் எனக்கு அது தெரியவந்தது, அந்த பெருமை அண்ணனை சாரும்.

இந்த வாக்கியம் தமிழ்நாட்டிற்கு தகுந்த வாக்கியம். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறவில்லை 

--------

பயிற்சி இல்லாத அறிவு 
பயனற்றது.
அறிவு இல்லாத பயிற்சி 
ஆபத்தானது.

"Knowledge without practice is useless. Practice without knowledge is dangerous."

பயிற்சி இல்லாத அறிவு 
பயனற்றது.
(அரசியல் அனுபவம் இல்லாத ஆட்சி பாயனற்றது )

அறிவு இல்லாத பயிற்சி 
ஆபத்தானது. 
(நல்லது கெட்டது என்று பகுத்து அறியமுடியாத சிலரால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி ஆபத்தானது.)

(ஆகவே நம்முடைய களப்பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கவேண்டும், நமக்குள் நல்ல ஒழுக்கங்கள் நிறைந்து கிடக்கின்றன, அவை களப்பணியாளர்களிடம் சேர்க்கவேண்டும் )

------

முந்தைய ஆட்சியில் அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தாததுதான் இந்த விளைவு. தனியார் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம், அரசு பள்ளிகள் தரம் தாழ்ந்து போகின்றன. அதனை நாம் சீரமைக்க வேண்டும். அது தலையாய கடமை.

ஒரு நாட்டை அழிக்க விரும்பினால் 
அங்குள்ள இளைஞர்களின் 
சிந்தனையை அழையுங்கள் நாடு 
தானாக அழியும் 

- விளாடிமர் லெனின்  

"If you want to destroy a nation,

destroy the thinking of its youth;

the nation will destroy itself."

ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும் ---ஆபிரகாம் லிங்கன்

"What we teach one generation in school is

what the next generation will reflect in society."

ஏற்ற காலம் இது 

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். 

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.

"When a rare and favorable opportunity presents itself,

we should seize that very moment

to accomplish difficult tasks and

achieve success."

இந்த ஆட்சி மிகப்பெரும் ஏமாற்றத்தை நம் இளைஞர்களுக்கு கொடுத்துள்ளது என்பது அறிவோம். முந்தைய ஆட்சிகளிலும் உள்ள வெறுப்பையும் வெளிக்காட்டியுள்ளது.

அண்ணன் சே.குவேரா சொல்வதை போல 

விதைத்துக் கொண்டே இருப்போம் 
முளைத்தால் மரம் ....இல்லையேல் உரம் ...

"Keep planting your seeds of effort.

If they grow, they become trees;

if they don't, they still nourish the ground for future growth."

-------

யோசிக்காமல் எடுத்த முடிவுகள் 
அனைத்தும் 
யோசிக்க வைத்துக் கொண்டே 
இருக்கிறது...!

"Hasty decisions made without proper thought

often leave us thinking about their consequences

for a long time."

அறிவாண்மை மக்கள் அனைவரும் குழந்தைகள் மீதான பாசத்தினால் தவறு செய்துவிட்டார்கள். தமிழகத்திற்கு இழப்புதான், தவறுகளை உணர்ந்த மக்களை வழிநடத்துவது நம்முடைய தலையாய கடமை.

"பெருங்கடலை அசைத்து கொண்டிருக்கிறது 
மீன் குஞ்சியின் சின்ன துடுப்பு "

"Even the smallest effort can

create movement in the vastest ocean,

just as the tiny fin of a young fish does." or

"The tiny fin of a baby fish keeps the mighty ocean in motion."
---அப்படி இருக்கும்போது, இந்த மேன்மையான சமுதாயத்தை நம்மால் விழித்துக்கொள்ள வைக்க முடியாதா என்ன

------

ஒரு கோமாளி 
அரண்மனைக்குச் சென்றால்,
அவன் 
அரசனாகி விடுவதில்லை.
அரண்மனைதான் 
சர்க்கஸ் கூடாரமாகிவிடும் 

          --துருக்கிய பழமொழி 

"If a clown enters a palace,

he does not become a king;

the palace becomes a circus." or

"Putting an unworthy person

in a position of power

does not elevate the person—

it lowers the dignity of the institution."

நம்முடைய வருங்கால அமைச்சர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நாம் நிர்வாகம் சமந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் நாம் அறிந்துகொண்டே வரவேண்டும்.... ஒரு வாய்ப்பு கிட்டும்போது, நமது ஆட்சியை சிறப்புற செய்யவேண்டும்... அதனை நெடுங்கால திட்டமாக கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் அனைத்து விஷயங்களின்/நடப்புகளின் கிடங்காக நாம் ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளேன்.

  • சமீபத்தில் கூட தூத்துக்குடி MLA, தன்னுடைய தொகுதி எல்லை எது என்று தெரியாமலே நன்றி சொல்ல சென்றிருக்கிறார். 
  • ஒருவர் பாறைகளின் குழியில் குப்பைகளை கொட்டி 4 அடி ஆழம் மணல் கொட்டினால் சோலி முடிஞ்சிடுச்சி சொல்ராங்க.
  • ஒருவர் எதற்கு எடுத்தாலும் 'no comments' சொல்கிறார், அதுவும் அமைச்சருக்கு தெரியவில்லை, பக்கத்தில் உள்ள நபர் எடுத்து சொல்கிறார். இதை எல்லாம் பார்க்கவேண்டிய அவல நிலை வந்துவிட்டது.
  • ஒருவர் இன்ஸ்டாவில் "ரீலிஸ்" போட்டு முதலீட்டாளர்களை தமிழகம் திருப்புகிறார்.
  • அ தி மு க ஆட்சியிலும் கூட அறிவார்ந்த அமைச்சர்களை அறிவோம்...குளத்தின் நீராவியை கட்டுப்படுத்த தெர்மாகோல் படுத்தியதை...இவற்றில் ஒன்றறிவேன் அவர்களை வழி நடத்தும் அரசு அதிகாரிகளுமா அறியாதவர்கள், இல்லை அதிகாரிகள் கூறிய அறிவுரைகளை மறுத்தார்களா...
  • இதையும் நான் சொல்லவில்லை, கர்நாடக முதலமைச்சர், நம்முடைய முதலமைச்சரை பார்த்து "inexperienced politician" என்று கூறுகிறார். ஒரு தமிழனாக இருந்து பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது. இவ்வாறு பேசும் விடீயோக்களை இந்த கவர்ச்சி சமூகம் பார்க்காது. அப்புறம் எப்படி தமிழ் உணர்வு வரும்.

அதையேதான் வள்ளுவர் கூறுகிறார் 

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஓம் அளவுமோர்  நோய் 

சொந்த புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

"Those who neither think for themselves

nor listen to the advice of others

carry a lifelong burden

that is harder to cure than any disease."

.....அவ்வளவு இனிமையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை நாம் அறிவோம். 

நம் ஆட்சி அமையும், அப்போது 'கால அவகாசம்' என்ற இருவார்த்தையை நம் வரலாற்றில் எழுதி வைத்துவிட்டு செல்லக்கூடாது, ஆட்சிக்கு வந்த நாளன்றே அனல் பறக்கவேண்டும்.

------

திட்டங்கள் 

குழந்தை செல்வங்களுக்கு 

  • பெண் குழந்தைகள் விழிப்புணர்வு. நாம் AI வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளத்தின் வாயிலாக பரப்ப வேண்டும்.
  • முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் 10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு - அடுத்து என்ன துறைகளை தேர்வு செய்வது, அந்தந்த துறைகளின் எதிர்கால நம்பிக்கைத்தன்மையை விளக்குதல், இதுபோன்று பல விஷயங்களை பகிர்தல்.
  • NEET, JEE வகுப்புகள் திட்டமிடுதல்.
  • பள்ளி பாடத்திட்டங்களை, ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் தின்தோறும் அளித்தல் (LIVE) youtube வழியாக.

இளைஞர்களுக்கு 

  • TNPSC, UPSC வகுப்புகள் திட்டமிடுதல். "தமிழ் தலைவன் " அல்லது "தமிழ் இளவரசன்" திட்டம் 
  • தொழில் சம்மந்தமாக அல்லது தற்சார்பு வாழ்வு சமந்தமாக விழிப்புணர்வு பயிற்சி அளித்தல் 
  • பெண்களுக்கு கைத்தொழில் செய்வதற்கு தேவையான விழிப்புணர்வு கூட்டம் - நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல். Tally course, type writing etc.
  • இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை கவனம் கொள்ளுதல் 
  • நவீன முறையில் அந்தந்த மாவட்டக்களில் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்குதல்.
  • சுயவேலை வாய்ப்புகளை உருவாக்க தன்னார்வலர்களை அழைத்து பயிற்சி அளித்தல்.

பாமர மக்களுக்கு 

  • Multiplier Effect or Spillover Effect - கால்நடை வளர்ப்பு மற்றும் அதனை சார்ந்த தொழில்களை அந்தந்த மாவட்டங்களில் வளர்த்தல், பயிற்சி அளித்தல். கால்நடைகளை பாதுகாத்தல், பராமரித்தல் இவற்றில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • விதைப்பு காலத்திற்கு முன் விவசாயிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்தல்; மற்றும் அறுவடை காலங்களில் அந்தந்த பயிரின் விலை, எங்கு விற்றால் லாபம் கிடைக்கும். இதுபோன்ற இன்னும் மற்ற விஷயங்களை விவசாயிகளுடன் பகிர்தல்.
  • அந்தந்த பகுதியில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், கைத்தொழில் பயிற்சி

களப்பணியாளர்களுக்கு 

  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸாப் குரூப் உருவாக்கல், சமூக வலைத்தளங்களை முழுமையாக உபயோகப்படுத்தல்.
  • AI மூலம் இயற்கை, மண்வளம், தமிழ் வரலாறு, திட்டங்கள், உரிமைகள் இது போன்று விழிப்புணர்வு விடீயோக்களை உருவாக்கி இன்ஸ்டாவில் வைரல் ஆக்க வேண்டும்.
  • AI மூலம் விழிப்புணர்வு விடீயோக்களை உருவாக்கும் நபர்களை இணைக்கவேண்டும்  
  • ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும்  ஒன்று அல்லது மூன்று பொறுப்பாளர் நியமிக்கலாம் 
  • கட்சி உறுப்பினர்கள் பஞ்சாயத் கூட்டங்களில் பங்கேற்றுதல், நிறைகுறைகளை அறிதல்.
  • களப்பணியாளர்களின் பேச்சு திறமையை வளர்க்க வேண்டும். அதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டும், அவற்றில் அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்(நாட்டு நடப்புகள், ஒவ்வொரு பிரச்சனைக்கும் தகுந்த தீர்வுகள்)
  • சின்ன சின்ன பொதுசேவைகளை களப்பணியாளர்கள் தங்களால் இயன்றதை மக்களுக்கு செய்வதால் ஒரு முன்னேற்றத்தை காணமுடியும். அதனை விடியோவாக பரப்ப வேண்டும்.
  • புதிய கட்சிகள் மற்றும் பழைய கட்சிகள், அவற்றின் நகர்வுகளை கவனத்தில். 

இன்னும் அனுபவம் மிக்கவர்களோடு களத்தொண்டர்களோடு கலந்து ஆலோசித்தால் நிறைய திட்டங்களை அறிந்துகொள்ளமுடியும் 

  1. மே 18 தினம் அனுசரிதல்.
  2. யுனெஸ்கோவால் பிப்ரவரி 21 “சர்வதேச தாய்மொழி தினம்” ஆக அறிவிக்கப்பட்டது.
  3. இயற்கை சார்ந்த தினங்களை அனுசரிதல்...கூட்டம் போடுதல்
  4. கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கட்சியின் logo (விவசாயி) பதித்த T SHIRT வழங்குதல்.

  5. கோடைகால குளிர் மோர் பந்தல் அமைத்தல்.

------

“I am indebted to my mother & father for giving me life; I am indebted to my elder brother Seeman for teaching me to protect my people.”
“வாழ்வை அளித்ததற்கு என் தாய் தந்தைக்கு நான் கடன்பட்டவன்;

தமிழ் இனம் காக்க கற்றுத்தந்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கு கடமை பட்டவன்.

-----

 

என்னுடைய அண்ணனுக்கு சொல்ல ஆசைப்படுவது 

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.

“வென்றவர் தோற்பர்; தோற்றோர்
    வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்
    உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘
என்றனர் அறிஞர் அன்றே!
    ஆற்றலுக்கு எல்லை உண்டோ?

------

முடிவுரை (speech should end with this kural)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 

எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்

வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் 

------

 

இப்போது அண்ணனுக்கு வருவோம் 

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.

அதனால் நான் அறிவில் சிறியவனாக இருந்தும் கூட, என் அண்ணனுக்கு சிலவற்றை கூற ஆசை 

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.

மனிதனின் உணர்வு அவன் மனத்தால் உருவாகிறது; ஆனால் அவனைப் பற்றி மக்கள் கூறும் மதிப்பீடு அவன் சேர்ந்திருக்கும் இனத்தால் (சுற்றத்தால்) அமைகிறது.

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான்

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

ஒருவரது முகக்குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

ஒற்றாடல் (கட்சியினுள் இருப்பவர்களை கூறவில்லை)

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு தகர்க்க முடியாத ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அந்த கட்டமைப்பின் அறிவுறுத்தலின் படி நம்முடைய சேனாதிபதிகள் இயங்க வேண்டும்.

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம், மிகச் சிறந்தது ஆகும். 

(அண்ணன் சீமான் அவர்கள் இயற்கை, மண் வளம், மனித வளம், நீர் வளம், விவசாயம் ஆகியவற்றை வரும் காலத்திற்கு காத்து கொடுக்க வேண்டும் என்பதை பல மாநாடுகளிலும் போராட்டங்களிலும் கூறி வருகிறார்)

------

தன்னை திட்டுபவர்களுக்கு  

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 

நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும் 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

🏷️ Tags:

No tags available


📰 Related Articles