Published on 12 Jul 2026
தகுதி இல்லாத இடத்தில் அன்பை
செலுத்திவிட்டு ஏமாந்து விட்டேன்
என்று சொல்லாதே
தப்பித்து விட்டேன் என்று
மகிழ்ச்சிகொள்...!!
------
மரத்தை பார்த்து கற்றுக்கொள்...
தன்னை விட்டு
பிரியும் இலைகளை
அவை கண்டுகொள்வதில்லை ...
------
உடன் இருப்பவர்களுக்கு
ஓடமாக இரு ....
உதறி போனவர்களுக்கு
பாடமாக இரு ....
------
தகுதியை பார்த்து யாரிடமும் பழகாதே ...!
உன் இறுதி சடங்கில்
தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான் ....!!
தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான் ....!!!
-----
கெட்டுப்போன உணவை
தூக்கி எறி
உடலுக்கு நல்லது ....
விட்டுப்போன
உறவை மறந்துவிடு
மனதுக்கு நல்லது
------
தூங்கும் பொழுது நிம்மதியாகவும்
எழுந்திருக்கும் பொழுது சந்தோசமாகவும்
இருக்கும் மனிதன் எவனோ அவனே
உலகின் பணக்கார மனிதன் ...!
------
நேர்மையாக உழைத்துக்
கொண்டே இரு
நீ அவமான பட்டு அழுத
இடத்தில்
காலம் உன்னை சிரிக்க
வைத்து அழகு பார்க்கும்.
-------
அதிகம் பயணிக்காத
பாதைகளில்
செல்லும் துணிவை
வளர்த்தெடுங்கள் ...
அதுதான் உண்மையான
தலைமைப் பண்பு ...!!!
-------
பறப்பதற்கு வசதிகள்
இருந்தாலும் ...
தரையில் இறங்கவும்
கற்றுக்கொள் ...!
சிறகுகளை இழந்தாலும்
வருத்தமாட்டாய் ...!!
------
எதையும்
நீ தேடிப் போகாதே
உனக்கு தகுதி
இருந்தால்
அது உன்னைத் தேடி வரும் ...!!!
------
புன்னகையும் மௌனமும்
மிக பெரிய ஆயுதங்கள்
புன்னகை பல
பிரச்சனைகளை தீர்க்கும்
மௌனம் பல
பிரச்சனைகளை வர
விடாமல் தடுக்கும்...
-----
உன்னை
செதுக்கிக் கொள்ள
உளி தேவையில்லை
பலரது அவமானங்களும்
சிலரது துரோகங்களும்
போதும் ...!!!
-----
பணத்திற்கு தெரிந்த ஒரே மொழி
இன்று நீ என்னை காப்பாற்றி
வைத்தால் நாளை உன்னை நான்
காப்பாற்றுவேன் ...!!!
------
விழுதுகளுக்கு
ஆசைப்பட்ட
கிடைமட்டக் கிளைகள் ....
ஒருபோதும்
விண் நோக்கி
வளர்வதில்
விருப்பம்
கொள்வதில்லை ...
-----
வெறுப்பின்மைதான் சிரித்த
முகத்தைக் கொடுக்கும். அந்த
முகமே அன்பு ஒளி வீசும் விளக்காகும்.
-----
உன் முதல் வெற்றியில் ஓய்வு எடுத்துவிடாதே.
ஏனெனில், இரண்டாவது முயற்சியில் நீ
தோல்வி அடைந்தால்,
உனது முதல் வெற்றி அதிர்ஷ்டத்தில்
கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள்
காத்திருக்கும்
----அப்துல் கலாம்
-----
No tags available