Published on 08 Jul 2026
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்
-------
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே`
அழகுக்கு அழகு செய்வார்.
- குமரகுருபரர்
விளக்கம்
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை
-------
பத்து தலைமுறையின் ஏழ்மையை
ஒற்றை தலைமுறையில் மாற்றும்
வல்லமை கொண்ட ஆயுதம்
"படிப்பு "
-----
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?
------
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்
------
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
-----
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்
------
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
--------
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
-------
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்
-------
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்கவேண்டும்; இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும்
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள்
--------
புத்தகங்களில்
செலவிட்ட நேரம்,
எதிர்காலத்தில்
வருமானமாக திரும்பும்
-------
தயங்குகிறவன் கை தடுக்கிறான்
துணிந்தவன் கை தட்டல் பெறுகிறான்
------
வெற்றி
உன்னுடைய உழைப்பு யாருக்கும்
தெரியக்கூடாது ...!
உன்னுடைய வெற்றி
ஊருக்கே தெரிய வேண்டும் ..!
------
No victory without sacrifice.
------
Your normal day is someone's
dream, so be thankfull everyday.
------
தனக்கு உதவ
யாரும் இல்லை
என்று உணர்ந்தவன்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
வெற்றியாகத்தான் இருக்கும்
------
உங்களுக்கு கிடைக்காத அனைத்து
பொருள்களையும் உங்கள் பிள்ளைகளுக்கு
தர நினைப்பதைவிட, நீங்கள் கற்றுக்கொள்ளாத
விஷயங்களை கற்றுக்கொடுங்கள்.
பொருள்கள் பழுதாகிப்போகும்
அறிவு அப்படியே இருக்கும் ...!!!
------
உலகில்
நல்லவர்களே இல்லை என்று
சொல்லாதே ....!
நீ நல்லவனாக இரு....!!!
-----
வாழ்க்கை சிலசமயம்
நாம் விரும்புவதை
தருவதில்லை...
காரணம்,
நீ அதற்கு
தகுதியானவன் இல்லை
என்பதற்காக அல்ல ...
அதைவிட சிறந்த ஒன்றுக்கு
நீ தகுதியானவனாக
கூட இருக்கலாம் ....!!!!
-----
Good Students become good
Employees...!!
Self-learners become
Employers.
------
தகுதிகள் சிறைப்பட்டு
விட்டால்
திறமைகளுக்கு
மதிப்பிருக்காது...!!!
-----
Don't be a parrot in life
Be an Eagle.
A parrot talks too much
but can't fly high.
But an eagle is silent and
have the power to touch
the sky...!!!
-----
அதிகம் பயணிக்காத
பாதைகளில்
செல்லும் துணிவை
வளர்த்தெடுங்கள் ...
அதுதான் உண்மையான
தலைமைப் பண்பு ...!!!
------
உலக எண்ணிக்கையில்
ஒருவனாக இருப்பதை விட
உலகமே
எண்ணும் அளவுக்கு இரு !!
-------
விழுதுகளுக்கு
ஆசைப்பட்ட
கிடைமட்டக் கிளைகள் ....
ஒருபோதும்
விண் நோக்கி
வளர்வதில்
விருப்பம்
கொள்வதில்லை ...
------
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்...!!!
------
பிறர் செய்த உதவி
உன் கையில்
அதிகமாக
தங்கிவிடாமல்
பார்த்துக் கொள் ...
-----
கற்றவை கை
கொடுக்கும்....
நன்கு கற்றால்,
கை நிறைய
கொடுக்கும் ...
------
No tags available