Irrelevant speech

Published on 28 Jun 2026


சட்டமன்ற அவையில் நாகரிகமற்ற பேச்சு தமிழக முதல்வர் பேசியிருக்கும் பேச்சு ஏற்புடையது அல்ல.

திருச்சி சட்டமன்ற நன்றியுரையில் முதல்வர் பேசியிருப்பது 

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.  

பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, ‘அவன் நல்ல பண்பில்லாதவன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். 

பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

நல்ல செயல்களை பாராட்டாமல் 

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

-----

ஒரு கட்சி தலைவரின் முன்பு நல்லவன் போன்று நடத்தலும், இல்லாதபோது அவதூறாக பேசுதலும் 

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து. 

புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர்

----

தனது கட்சியில் தவறு செய்பவர்களை தண்டிக்காமல், நாகரிகமான முறையில் நடப்பவர்களை சிறைபிடித்தல் 

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்

-------

ஒரு குழுவோ அதிகாரிகளோ ஆலோசனை வழங்கி இருப்பினும், அவ்வாறு நடக்காதவர்களுக்கு 

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.

-----

ஒரு அரசியல் வாதி ஒரு நடந்த நிகழ்வை, இல்லை என்று மறைத்தல் 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்

🏷️ Tags:

No tags available


📰 Related Articles