Published on 30 Jun 2026
தமிழ் தாய் பெற்றுஎடுத்த பாட்டி, பாட்டன், தாய் தந்தையர்கள், வீராங்கனைகளுக்கும், வீர மறவர்களுக்கும் வணக்கம்.
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள் (அந்த படைதான் நாம் தமிழர் கட்சியின் படைகள்)
மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களே தடுத்தாலும், தமிழ் தேசிய படை ஊக்கத்தில் குன்றா குன்று....அசைக்கமுடியாத அரண்.
பெருமைக்குரிய இளைஞர்கள் படைகளால் மட்டுமே தமிழ் தேசியத்தை காக்கமுடியும். நம்பிக்கைக்குரிய தோழர்களே ஒரு நாள் உணர்வீர்கள், நம்மை பெற்று எடுத்த தமிழ் தாய் "வீரமிக்க பெண்மணி" என்பதை, அப்படி பெற்று எடுத்த வீர மறவர்களே அடிமை தனத்தை ஆதரிக்கிறீர்களா
-------
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
------
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
கூற்றம் (எமன்) சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும்
--------
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
--------
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். (யாரை சொல்கிறேன் என்பதை நீங்கள் உணரமுடியும்)
நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்
-------
வறுமைக்கு பிறகு கிடைக்கும்
செல்வமும் ....
அழுகைக்கு பிறகு வரும்
தைரியமும் ....
தோல்விக்கு பிறகு கிடைக்கும்
வெற்றியும் ....
எளிதில் சாயாது ....
என்றும் நிலைத்து நிற்கும் .....!
-------
நகரங்களை கொளுத்தியது
யார் என்பதல்ல கேள்வி....
பைத்தியத்தின் கையில் தீப்பெட்டியை
கொடுத்தது யார் என்பதுதான் கேள்வி....---நல்நெசீன் ஷா
-----
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்.
விவசாயத்தை விட விளையாட்டு மிக கடினம்
15 நாட்களுக்கு காய்கறிகளை அறுவடை
செய்து சந்தைக்கு அனுப்பாதீர்கள்
அதுபோல உங்களின் பசு மாட்டு பாலை
கறக்க வேண்டாம்
உங்கள் கன்றுக்குட்டி குடிக்கட்டும்
பிறகு பாருங்கள்
உணவின் அருமையும்
விவசாயிகளின் முக்கியத்துவமும்
அனைவர்க்கும் தெரியும் ...
அரசாங்கம் நீங்கள் சொல்வதை கேட்கும்
------
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.
-------
"நல்லதை நினைவுபடுத்திக்
கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
கெட்டது தானே ஒட்டிக்கொண்டுவிடுகிறது "
"We have to keep reminding ourselves of the good, because the bad clings to us on its own."
-------
முந்தைய ஆட்சியில் அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தாததுதான் இந்த விளைவு. தனியார் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம், அரசு பள்ளிகள் தரம் தாழ்ந்து போகின்றன. அதனை நாம் சீரமைக்க வேண்டும். அது தலையாய கடமை.
ஒரு நாட்டை அழிக்க விரும்பினால்
அங்குள்ள இளைஞர்களின்
சிந்தனையை அழையுங்கள் நாடு
தானாக அழியும்
- விளாடிமர் லெனின்
"If you want to destroy a nation,
destroy the thinking of its youth;
the nation will destroy itself."
ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும் ---ஆபிரகாம் லிங்கன்
"What we teach one generation in school is
what the next generation will reflect in society."
------
யோசிக்காமல் எடுத்த முடிவுகள்
அனைத்தும்
யோசிக்க வைத்துக் கொண்டே
இருக்கிறது...!
"Hasty decisions made without proper thought
often leave us thinking about their consequences
for a long time."
அறிவாண்மை மக்கள் அனைவரும் குழந்தைகள் மீதான பாசத்தினால் தவறு செய்துவிட்டார்கள். தமிழகத்திற்கு இழப்புதான், தவறுகளை உணர்ந்த மக்களை வழிநடத்துவது நம்முடைய தலையாய கடமை.
"பெருங்கடலை அசைத்து கொண்டிருக்கிறது
மீன் குஞ்சியின் சின்ன துடுப்பு "
"Even the smallest effort can
create movement in the vastest ocean,
just as the tiny fin of a young fish does." or
"The tiny fin of a baby fish keeps the mighty ocean in motion."
---அப்படி இருக்கும்போது, இந்த மேன்மையான சமுதாயத்தை நம்மால் விழித்துக்கொள்ள வைக்க முடியாதா என்ன
-----
ஒரு கோமாளி
அரண்மனைக்குச் சென்றால்,
அவன்
அரசனாகி விடுவதில்லை.
அரண்மனைதான்
சர்க்கஸ் கூடாரமாகிவிடும்
--துருக்கிய பழமொழி
"If a clown enters a palace,
he does not become a king;
the palace becomes a circus." or
"Putting an unworthy person
in a position of power
does not elevate the person—
it lowers the dignity of the institution."
-------
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.
-------
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
மக்களுக்கு உள்ளுணர்வு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். அவ்வளவு மேன்மை பொருந்திய மக்கள்தான் தமிழ்மக்கள்.
-------
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
நம்முடைய தமிழ் இனம், மொழி, பண்பாடு, பாரம்பரியம், இலக்கியம் இவற்றை காத்து மேன்மை அடைய செய்ய ஒரு புரட்சி படை இருக்கும்போது அதனுடன் சேர்ந்து செயலாற்றும்போது பெருமைதானே யொழிய சிறுமை அன்று
-------
உன் உணர்வுகளை மதிக்காத இடத்தில் ....
உரிமைக்கும் மட்டும் இடமளிக்காதே ....
------
அடிமை தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் மறந்து விடுகிறோம்
-------
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?
------
"அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது"
நாம் எல்லாவற்றையும் இழந்து இந்த மலை வளம், மண் வளம், நீர் வளம், விலங்கினங்கள், தாவரங்கள் எல்லாவற்றையும் இழந்து பின்பு நம்முடைய தலைமுறைகளை திசை தெரியாமல் விட்டுப்போவது, இந்த மனசாட்சி உருத்தலயா
-------
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது
------
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிரியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும் or பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
------
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்
------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
-------
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது
-------
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்
-------
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்
-------
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். (திரள் நிதி)
ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும் or நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
------
இங்கு நடிப்பவனுக்கு கிடைக்குற அந்தஸ்து படித்தவனுக்கு கிடைப்பதில்லை....காரணம் ....படித்தவனே நடிப்பவனை நாடாள அழைப்பதுதான் .....
------
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவுமோர் நோய்
சொந்த புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
-------
“வென்றவர் தோற்பர்; தோற்றோர்
வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்
உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘
என்றனர் அறிஞர் அன்றே!
ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
------
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
------
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்
--------
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும்
------
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும்
-------
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
இன்பம் உண்டாகிய போது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான்
-------
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான்
--------
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான்
-------
விதைத்தவன்
உறங்கலாம்.
ஆனால் விதைகள்
ஒருபோதும்
உறங்குவதில்லை.
--பிடல் காஸ்ட்ரோ
-------
பயிற்சி இல்லாத அறிவு
பயனற்றது.
அறிவு இல்லாத பயிற்சி
ஆபத்தானது.
-----
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்
------
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும்
-----
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்த போது, அவர்கள் கெடுதல் செய்வார்கள்
-------
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்
------
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்!
குப்பைகளை பள்ளத்தாக்கில் போட்டு மூடுவது அமைச்சர் கூறியது
------
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்
------
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;
மானமற்ற ஒருவருடன் போராடுவது
கஷ்டமான காரியம்.
-----
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது
------
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப்போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது
------
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும், நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்
------
கனவினும் இன்னா து மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.
------
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும்
கட்சி தொண்டர்கள் செய்யும் தவறுகளை கண்டித்து வழிநடத்தாத தலைவர் நிலைபெற்றதில்லை
-----
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும்
மாற்று அரசியல் என்று சொல்லிவிட்டு இக்கட்சிகளிலும் இருந்து வேட்பாளர்களை கொண்டு ஆட்சி அமைப்பது எவ்வாறு மாற்று அரசியலாக அமையும்
-------
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்
(தற்போதைய ஆட்சி அவர்களுக்கு இருக்கும் 107 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் ஆதரவு தெரிவித்த கட்சிகளுடன் மட்டும் ஆட்சி நடத்தியிருந்தால், கண்டிப்பாக மக்கள் இன்னும் ஆதரவு கொடுத்து இருக்க கூடும். ஆனால் இவர் மாற்று அரசியல் என்று சொல்லிவிட்டு, பதவி மேல் உள்ள ஆசையின் காரணமாக மற்ற கட்சிகளிலிருந்து வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்ததுதான் இவர் செய்த மிகப்பெரிய தவறாக இருக்கும்.
அவருடைய கட்சிக்காக உழைத்த மேன்மை பொருந்திய என்னுடைய அறிவார்ந்த சகோதரர்கள் உழைப்பு வீணாயிற்று. எப்படி நம்பிக்கை தன்மையை ஆளுமை தக்கவைத்து கொள்ளும். தற்போது கட்சியில் சேர்ந்தவர்கள் குன்றுமணி அளவிற்கு கூட அந்த கட்சிக்காக உழைக்காமல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது துரோகம் தான் செய்த கட்சிக்கு மட்டுமல்லாமல், சென்ற கட்சியில் உள்ள பெருமைக்குரிய சகோதரர்களுக்கும் பொருந்தும்.
மதிப்பிற்குரிய சகோதரர்களே ஏமாந்து போய்விடாதீர்கள். உங்களுடய தலைவர் தன்னுடைய கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லையே.)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும்
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
--------
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை
-------
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
பெரும்பொருள் வந்தடைதல், கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே
-------
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
------
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
‘இவன் துணையிலன்’ என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்; செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்
நம்பிக்கைக்கு பேர்போன விவசாய பெருமக்களே, என்னுடைய அப்பா, அம்மா, பாட்டன், பாட்டி, சகோதிரிகள், சகோதர மக்களே உங்களுக்காக கேட்க யார் இருக்கிறார்கள் என்று கருதி, பொய் வாக்குறுதி கொடுத்து தற்போதைய அரசு ஏமாற்றியுள்ளது. நாங்கள் உங்களுக்காக இருப்பது உங்களுடைய மனதிற்கு புரியவில்லையா. உங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்க வேண்டாமா. உங்களுடைய வலிகளை உங்களுடன் இருப்பவர்களை தவிர வேறு யாரால் உணரமுடியும்.
-------
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்
-----
Mahatma Gandhi
“Be the change that you wish to see in the world.”
“நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாற வேண்டும்.”
------
Abraham Lincoln
“Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.”
“மக்களால், மக்களுக்காக, மக்களுக்கான அரசு இந்த உலகிலிருந்து அழியாது.”
------
அநீதிக்கு எதிராக
உங்கள் இதயம்
பற்றி எரியவில்லை எனில்,
உங்கள் வசதி
உங்களின் சிறையாகும்
- சே குவேரா
-----
ஒவ்வொரு பெருஞ் செல்வத்திற்கு
பின்னாலும் ஒரு பெருங்குற்றம்
ஒளிந்திருக்கிறது
-----காரல் மார்க்ஸ்
------
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.
------
Difficult roads always lead to Beautiful Destination
எங்களது நோக்கம் தற்காலிக அதிகாரத்தை அடைவது அல்ல, நிரந்தர தமிழ் தேசியத்தை தகர்க்க முடியாத அரணால் கட்டமைத்து விட்டு செல்வதுதான்.
-----
விழையும் பொருள் எதுவும்
தானாக வீடு வந்து
நுழையும் எனக் கருதும்
நோக்குடையோர் அல்லேர்
எங்கள் பயணம் பெரிது
செல்லும் பாதை நெடிது
வழி துயரம் தவிர்க்க
துணை தேடோம்
எங்கள் படைக்கு
ஒரு சிலரும் போதும்
அதற்கு நாம் தமிழர் படையே போதும்
....கிறிஸ்துவ குரு கூறியது
-------
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு -----ஒளவையார்
------
கிழிந்த
புத்தகத்தில் கூட
நீங்கள் உயர்ந்து வாழ
ஒரு சில வரிகள் இருக்கும்
ஒரு முறையேனும்
படித்துப்பார் ...!
------
“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” (புறநானூறு – 312)
பொருள்:
மகனை நல்லவனாக வளர்ப்பது தந்தையின் கடமை; மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்குவது அரசனின் கடமை.
-------
உங்கள் திறமை அல்ல, உங்கள்
அணுகுமுறையே உங்கள் உயரத்தை
தீர்மானிக்கும் ...
உங்களுடைய ஆட்சி அமைத்தலை திறமை என்று நினைக்கிறீர்கள், ஆனால் உங்களுடைய அணுகுமுறையே உங்களுடைய உயரத்தை தீர்மானிக்கும்.
------
Never give up because
great things take time.
-----
Where there is no struggle,
there is no strength.
-----
புகழ்ச்சியில் வளர்பவனுக்குத்தான்
பிறர் துணை தேவை ......
முயற்சியில் வளர்பவனுக்கு
தன்னம்பிக்கையே
துணை .....!
-------
"Decrating another person wife" said by Tilak.
முந்தைய அரசுகள் செய்த சில செயல்களை, திட்டங்களை நடைமுறை படுத்ததலையோ, பெயர் மாற்றம் செய்தலாலோ, மாற்றத்தை கொண்டு வரமுடியாது.
-------
குடும்ப அரசியலை விட,
குடும்பமே ஒவ்வொரு கட்சியிலும் இருந்து அரசியல் செய்வது
பேராபத்தானது.
------
சுயராஜ்யம் :
சுயராஜ்யத்தின் நோக்கம்
அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது.
மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை
உள்ளடக்கியதாக அஃது அமைய வேண்டும்.
மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய
நாடு முன்னேற முடியாது ----அயோத்திதாச பண்டிதர் (காத்தவராயன்)
-------
" தலைமைத்துவம் என்பது பொறுப்பில்
இருப்பது அல்ல, உங்களின்
பொறுப்பின்கீழ் இருப்பவர்களை
பத்திரமாக கவனித்துக் கொள்வது "
------
பிரச்சனையின்போது
அமைதியாக இருங்கள்.
எவன் அதை உருவாக்கினானோ
அவனே அதற்கான கதவையும்,
பூட்டையும், சாவியையும் வைத்திருப்பான்.
------
இறக்கும் முன்
தனக்குத் தானே
பூச்சூடி மகிழும்
நூறாண்டு வாழ்ந்த
பனைமரம் போல ...
இங்கு வாழும்
ஒவ்வொரு தமிழ் மறவர்களும்
பூச்சூடி வாழ்ந்து
மடியவேண்டும் ...!!
------
உன்னை அதிகம்
விமர்சிப்பவன்
உன்னைக் கண்டு
அதிகம்
பயப்படுகிறான் .
---பிடல் கேஸ்ட்ரோ
------
எண்களுடைய கொள்கைக்கு
எதிரியாக இருக்கலாம்
ஆனால்
எந்நன்றி கொன்றார்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு, ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை ....அதைத்தான் நம்முடைய அறநூலும் சொல்கிறது.
------
மூன்று பேரை மறக்காதீர்கள்
என் தமிழ் மறவர்களே ...!!
கஷ்டத்தில்
உதவியவர்...
கஷ்டத்தில்
உதவாதவர்....
கஷ்டத்தை
உண்டாக்கியவர்...
------
குறைகளை தன்னிடம்
தேடுபவன் தெளிவடைகிறான் ...
குறைகளை பிறரிடம்
தேடுபவன் களங்கப்படுகிறான் ...!!!
------
Nothing can destroy Iron,
only its own rust can...
Likewise, nothing can destroy TVK
only their ministers can...!!!
------
எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசுறவன்கிட்ட ...
எதுவுமே தெரியாத மாதிரி
நடந்துகிறவன்தான் புத்திசாலி ....!!!
------
பிறப்பால், வறுமையானவனாக
இருக்கலாம் ...
உழைப்பால் வசதியானவனாக
மாறலாம் ....
செயலால் மட்டுமே மனிதனாக
வாழலாம் .....!!!
------
A fool is known by his
speech; and a wise man
by silence...!!!
---Pythagoras
------
மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்
அமைதியாக இருக்கிறது.
மதிப்பில்லா சில்லறை காசு
தான் அதிகம் சத்தம் போடுகிறது.
சில மனிதர்களும் அப்படிதான்...
------
அழுத்தம் கூடும்போது
சுயரூபம்
வெளிப்பட்டே தீரும் ....
------
ஆடம்பரம் என்பது
ஆடும் பம்பரம்
எப்போது வேண்டுமானாலும்
சாய்ந்து விடலாம் .....
------
Dont compare yourself
to others, because no
onecan play your role
better than you..
-----
எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை
இழுத்தாலும் அதற்கு சாட்டையடி உண்டு,
அதேபோல் எத்தனை சிறந்த மனிதனாக
நீ இருந்தாலும் உனக்கும் விமர்சனம் உண்டு ...!!
-----
உழைப்பவனை தேடி
கண்டுபிடித்து
இயக்கம்
நடத்தினால்தான்
பலனுண்டு ..
கிடைத்தவனை
கொண்டு நடத்தினால்
பலனில்லை ...
---அறிஞர் அண்ணா
------
"The world suffers lot. Not because
of the violence of bad people. But
because of the silence of good people" ---- Nepolean
-----
உங்கள்
நற்செயல்களை
ஏற்றுக்கொள்ள
முடியாதவனே ....
உங்களுக்கு
எதிரியாக
இருப்பான் .
------
மாற்றம் வேண்டுமானால்
முதலில் கடினமாக இருக்கும் !
நடுவில் குழப்பமாக இருக்கும் !
இறுதியில் மிக அழகாக இருக்கும் !
போராடித்தான் ஆக வேண்டும்
------
விமர்சனங்களை
விதை ஆக்கு ! விதையை
உன் திறமையில்
மரமாக்கு ....!!
------
கடலில் கல் எறிவதால் கடலுக்கு
வலிப்பதில்லை.
கல் தான் காணாமல் போகிறது ...
விமர்சனங்கள் கல்லாகவும்
நாம் கடலாகவும் இருப்போம்.
-----
பேச்சில் இனிமை,
கொள்கையில் தெளிவு,
செயலில் உறுதி
ஆகிய மூன்றும்
உள்ளவரால் எதையும்
சாதிக்க முடியும் ....!!!
------
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்...!!!
-----
அதிகம் கொடுக்கக் கொடுக்க,
மக்கள் தங்களுக்காக உழைப்பது குறையும்;
அவர்கள் உழைக்காமல் போகப் போக,
அவர்களின் வறுமை மேலும் அதிகரிக்கும்
---லியோ டால்ஸ்டாய்
------
செடியை, கன்றை
"தண்ணீர் ஊற்றி
வளர்த்தேன்" என்கிறார்கள்.
மாமழை
ஒருபோதும்
சொல்லிக்கொண்டு
திரிந்ததில்லை
-------
மிகப்பெரிய தோல்வியைவிடவும்,
மிகப்பெரும் வெற்றிக்கே
நாம் மிகவும் அஞ்சவேண்டும் .
---கார்ல் மார்க்ஸ்
------
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை
No tags available