Arasiyal Speech

Published on 31 May 2026


தேர்ந்தெடுக்கப்பட்டவன் 
அயோக்கியன் 
என்றால்,
தேர்ந்தெடுத்தவன் 
முட்டாள் 
என்று 
அர்த்தம் ...!

-------

உன் உணர்வுகளை மதிக்காத இடத்தில் ....
உரிமைக்கும் மட்டும் இடமளிக்காதே ....

-------

தகுதியற்றவர்கள் கையில் ஆட்சி கொடுத்தால், 
ஆட்சி தரம் கெட்டு போய்விடும்,
பெருமைக்குரிய தமிழர்கள் பெருமை குன்றிவிடும்.

------

"மக்கள் ஒருபோதும் அறிவு தலைமையை தேடமாட்டார்கள், கவர்ச்சியை நோக்கித்தான் ஓடுவார்கள். கவர்ச்சியால் உருவாக்கப்பட்ட சமூகம், ஒருபோதும் அறிவு சமூகத்தை படைக்காது" ஹிட்லர் 

------

ஆல் மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு வந்த அரசியல் வாதிகள் அல்ல, அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கு வந்த புரட்சியல்வாதிகள்.

-------

நாங்கள் கலைகிற கூட்டமல்ல, விளைகிற கூட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

------

காற்றடிக்கும் திசைகளில் எல்லாம் பறக்கும் பதறுகள் அல்ல, புயலே அடித்தாலும் அதே இடத்தில் அசையாமல் இருக்கும் வீரியமிக்க மணிகள்.

-----

"அதிகாரம் மிக வலிமையானது" அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார். ஆனால் அதே அதிகாரம் நிலையானது அல்ல. ஆனால் ஏற்று இருக்கும் தத்துவ நிலைப்பாடும் கோட்பாடும் தான் நிலையானது, மாறாதது.

-----

விமர்சனங்களை கடக்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை தாங்க முடியாதவன் அற்ப வெற்றியைக்கூட தொடமுடியாது.

-----

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

-------

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
 (திரள் நிதி)

ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும் or நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

-----

முயற்சியை நிறுத்தாதவரை, தோல்வி நிரந்தரமானது அல்ல; தொடர்ந்து முயன்றால் வெற்றி நிச்சயம் - ஐன்ஸ்டின் 

-----

வெற்றி இறுதி அல்ல, தோல்வி முடிவு அல்ல; தொடர்ந்து முன்னேறும் துணிவே முக்கியம் 

-----

பெரிய வெற்றிக்கு முன் பெரிய கஷ்டம் வரும் - ரத்தன் டாடா 

-----

நீ தேடுவது, உன்னையும் தேடிக்கொண்டிருக்கிறது - ரூமி 

------

அழுகிய பழங்கள் தானாக கீழே விழும் 

------

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஓம் அளவுமோர்  நோய் 

சொந்த புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

------

எண்ணமும் உன்னுடையது 
நம்பிக்கையும் உன்னுடையது
முயற்சியும் உன்னுடையது
வெற்றியும் உன்னுடையது
தோல்வியும் உன்னுடையது

இவை ஐந்தும் உன்னுடையதாக இருக்கும்போது 
மற்றவர்களிடம் இருந்து வரும் 
ஒற்றை "விமர்சனத்தை" மட்டும் ஏன் பெரிதாக பார்க்கிறாய்...

------

நாம் நினைத்ததை அடைய,
நாம் நினைத்துப் பார்த்ததை 
விட அதிகம் "உழைக்க"
வேண்டும் .....

-----

“வென்றவர் தோற்பர்; தோற்றோர்
    வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்
    உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘
என்றனர் அறிஞர் அன்றே!
    ஆற்றலுக்கு எல்லை உண்டோ?

------

யோசிக்காமல் எடுத்த முடிவுகள் 
அனைத்தும் 
யோசிக்க வைத்துக் கொண்டே 
இருக்கிறது...!

-------

விதைத்தவன் 
உறங்கலாம்.
ஆனால் விதைகள் 
ஒருபோதும் 
உறங்குவதில்லை.

--பிடல் காஸ்ட்ரோ 

------

வாய்ப்பை இழந்தோர் வருத்தப்படுகிறார்கள் 
வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள் 
வாய்ப்பை உருவாக்குவோர் வெற்றி பெறுகிறார்கள் 

-------

ஒரு கோமாளி 
அரண்மனைக்குச் சென்றால்,
அவன் 
அரசனாகி விடுவதில்லை.
அரண்மனைதான் 
சர்க்கஸ் கூடாரமாகிவிடும் 

          --துருக்கிய பழமொழி 

-------

"நல்லதை நினைவுபடுத்திக் 
கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
கெட்டது தானே ஒட்டிக்கொண்டுவிடுகிறது "

--------

பயிற்சி இல்லாத அறிவு 
பயனற்றது.
அறிவு இல்லாத பயிற்சி 
ஆபத்தானது.

--------

கோவிலுக்குள் இஸ்லாமியர்கள் வரக்கூடாது, கிருஸ்துவர்கள் வரக்கூடாது ....ஏன் அவன் நாட்டுக்குள்ள போற ...அது தவறில்லையா...ஒரு நல்ல மானமுள்ள மரியாதைக்குரிய ஆண்மகன் செல்லமாட்டார்கள்.ஏன் இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பந்தம் போடுறீங்க 

-------

கீழ்த்தரமான தந்திரங்களினால் 
இந்த உலகில் மகத்தான 
காரியம் எதையும் சாதித்துவிட முடியாது..

---சுவாமி விவேகானந்தர் 

------

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 
 

‘எவ்வுயிரும் ஒத்த தன்மையானது’ என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன்; ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்

------

ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும் ---ஆபிரகாம் லிங்கன் 

-----

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

உயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள்

(நம்மிலும் சிலர் அறியாமையால் வாழ்ந்தாலும்,  என்னுடைய மக்கள் மிகவும் உயர்ந்தவர்கள், பண்பாடு மிக்கவர்கள், ஒழுக்கத்தோடு வளர்க்கப்பட்டவர்கள். தகுதியற்றவற்றை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். பொய் பரப்புரை ஒருபோதும் நிலைக்காது )

------

Never push a loyal person

to the point where they

don't care anymore..

-------

You can't build a strong team

on weak principles. The cracks

in your character will soon be

the cracks in everything you 

lead.

------

Leaders don't seek

followers. True leaders

attract people by the vision

and purpose they carry.

-----

Great leaders stand in

front when there's blame

and behind when there's

praise.

------

படம் ஒரு மூன்று மணி நேர ஆட்டம் தான்...
ஆனா இந்தியாவுல 28 பேருக்கு இடையே 
ஒரு பெரிய ஆட்டம் இருக்கு...
யாரு முதல் இடத்தை பொருளாதார வளர்ச்சியில் பிடிப்பது.
படம் முடிந்தாள் சம்பளம் நிச்சயம் 
ஆனா மக்களுக்கு வேலைவாய்ப்பு இருந்தாதான் 
அவங்களுக்கு சம்பளம் நிச்சயம் ...

பொருளாதார வளர்ச்சியில் தொலைதூர நோக்கம் இருக்கவேண்டும். இப்போது தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 2 ஆம் இடம். 

-------

குழந்தைகளை சிந்தனையை சீரமைக்க 
1. கைபேசியில் இருந்து அவர்களை காப்பாற்ற பஞ்சாயத் களில் விளையாட்டு கூடம் அமைக்கலாம்.
2. பொறம்போக்கு நிலங்களில் விளையாடு திடல்களை அமைக்கலாம்.
3. அறிவு சார்ந்த போட்டிகளை பள்ளிகளில் அதிகம் ஊக்குவிக்க வேண்டும், அதுவும் மாதம்தோறும் நடத்த வேண்டும்.
4. அன்றைக்கு கைவினை வகுப்பு என்று இருந்தது, அதற்கு திரும்பவும் உயிரூட்டலாம் 

------

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்

🏷️ Tags:

No tags available


📰 Related Articles