Published on 28 Jun 2026
ஒரு MLA தனது கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு , வென்று அவர்களுடைய கட்சி ஆட்சியை கைப்பற்றாமல் போனால் வெற்றி பெற்ற MLA தனது கட்சியை கைக்கழுவி விட்டு ஆளும் கட்சியை சரணடைதல் துரோகம்.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
‘இவன் துணையிலன்’ என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்; செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்.
"One should not harm a person thinking, 'He has no one to support him.' If one does so, the wrongdoer will in turn become a person without any support."
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?
"If a person openly condemns and publicizes the faults of their dearest friends, one can only imagine how harshly they would treat those who are not close to them."
-------
இவ்வளவு பதவியை, பணத்தை விட்டு வந்தேன் என்று செல்பவருக்கு.
தோற்ற கட்சியில் இருந்து ஒன்றும் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று செல்பவருக்கு
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
"Those who falsely claim to have given up all attachments, yet do not live accordingly, will face numerous hardships that leave them deeply regretting their actions, saying, 'What have we done?'"
No tags available