The pride of the Tamil language

Published on 13 Apr 2026


தமிழ் மொழியின் பெருமை

  • உலக மொழிகள் தமிழ் மொழி இலக்கண, இலக்கியவளம் பெற்று திகழும் செம்மையான மொழி.
  • ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை. இதனையேதான் பாரதியார் வியப்படைகிறார் 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!

சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். அதுபோல இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன் றியிருக்க வேண்டும்.தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும். அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா? இதுதான் தமிழின் சிறப்பு.

திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்கள் பலவும் நிறைந்தது நம் தமிழ்மொழி. சான்றாக ‘மா’ – என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.

இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்து ம் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.

தமிழ் ஒரு புதுமை காணும் மொழி 
இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன. இ ணையம் , முகநூல் , புலனம் , குரல்தேடல் , தேடுபொறி , செயலி , தொடுதி ரை முதலிய சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்:
1. வேளாண்மை - கலித்தொகை 101, திருக்குறள் 81
2. உழவர் - நற்றிணை 4
3. அரசு - திருக்குறள் 554

அறிவியல் (science)
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளா ர். 

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.

- தொல்காப்பியம்

மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார் தொல்காப்பியர்.

திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கட ல்நீர்
நாழி முகவாது நால் நாழி

என ஔவையார் பாடலில்  கூறப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் (Environment) 
கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவம் (மெடிக்கல்)
போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.
- பதிற்றுப்பத்து

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது.

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்

- நற்றிணை

தொலைவில் உ ள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்

- திருவள்ளுவமாலை

தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
1. மேனாள் குடியரசுத்த லை வ ர் - மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல்கலாம்
2. இஸ்ரோ  அ றி வியல் அறிஞர் -டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
3. இஸ்ரோவின் தலைவர் - டாக்டர்  கை. சிவன்.

எழுத்து
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாக க் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.

மெய்யெழுத்துகள்
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.

உயிர்மெய்
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

ஆய்த எழுத்து
அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.

🏷️ Tags:
science in tamilscience

📰 Related Articles