Published on 24 May 2026
அதிகம் பயணிக்காத
பாதைகளில்
செல்லும் துணிவை
வளர்த்தெடுங்கள்....
அதுதான் உண்மையான
தலைமைப் பண்பு ..!
--------
தகுதியற்ற தலைவர்களால் ஒரு நாடு நாசமாய் போவதில்லை. தகுதியற்ற தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களாலே அந்த நாடு நாசமாய் போகிறது.
--------
வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தான் நல்ல மனிதர்களை தேடுகிறார்கள்....மற்ற நேரங்களில் நடிப்பவர்களோடு தான் நிற்கிறார்கள்.
--------
என்ன நடந்தாலும், எதை இழந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன். காரணம் நான்
100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல.... 1000
தோல்விகளை பார்த்தவன் ....தாமஸ் ஆல்வா எடிசன்
----------
விதைத்துக் கொண்டே இரு
முளைத்தால் மரம் ....இல்லையேல் உரம் ...சே.குவேரா
-------
"மண்டியிட்டு வாழ்வதை விட
நிமிர்ந்து நின்று சாவதே மேல்" --- சே குவேரா
-------
விழையும் பொருள் எதுவும்
தானாக வீடு வந்து
நுழையும் எனக் கருதும்
நோக்குடையன் அல்லேன்
என் பயணம் பெரிது
செல்லும் பாதை நெடிது
வழி துயரம் தவிர்க்க
துணை தேடேன்
என் படைக்கு
ஒரு சிலரும் போதும்
நான் ஒருவனே போதும்
....கிறிஸ்துவ குரு கூறியது
---------
"பெருங்கடலை அசைத்து கொண்டிருக்கிறது
மீன் குஞ்சியின் சின்ன துடுப்பு "
---அப்படி இருக்கும்போது, இந்த மேன்மையான சமுதாயத்தை நம்மால் விழித்துக்கொள்ள வைக்க முடியாதா என்ன
------
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து ---திருக்குறள்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு -----ஒளவையார்
-------
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்
-----------
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது
---------
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்கவேண்டும்; இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்
-------
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்
--------
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்
-----
உங்கள் திறமை அல்ல, உங்கள்
அணுகுமுறையே உங்கள் உயரத்தை
தீர்மானிக்கும் ...
-------
நீங்கள் கேட்கும் அனைத்தையும்
நம்பாதீர்கள். ஒரு கதைக்கு
எப்போதும் மூன்று பக்கங்கள்
இருக்கும், உங்களுடையது,
அவர்களுடையது மற்றும் உண்மை
----புத்தர்
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்
-------
வாதத்தை சொல்லும் பொழுது எதிரியை
உருவாக்காமல் சொல்லும் கலைதான்
நுண்ணறிவு
-----ஐசக் நியூட்டன்
-------
அறிவு மேன்மையானது...இருப்பினும் தைரியத்தினால்தான் பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.
---------
உங்களை
நிராகரித்த அதே
இடத்தில்.....
நிராகரிக்கவே
முடியாத சக்தியாக
வந்து நிற்பதுதான்
உங்கள் வெற்றி....
------
ஒருவன் அடைந்ததை நினைத்து
பொறாமைப்படாதே! அதை அடைய
அவன் எவ்வளவு இழந்து இருக்கிறான்
என்பதைக் கேள்விப்பட்டால் உனக்கு
அந்த ஆசையே வராது !
--------
"The Two most
powerful
warriors are
Patience and Time"
----Leo Tolstoy
-------
Never give up because
great things take time.
-------
Where there is no struggle,
there is no strength.
--------
“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” (புறநானூறு – 312)
பொருள்:
மகனை நல்லவனாக வளர்ப்பது தந்தையின் கடமை; மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்குவது அரசனின் கடமை.
------
அதிகாரம் என்பது "அரக்க குணமும் இரக்கமற்ற மனமும்" கொண்டது என்பார்கள், அதிகாரத்திற்கு எப்போதும் கண்கள் இருக்கும், ஆனால் அவற்றில் கண்ணீரை பார்க்கமுடியாது, அதுகளுக்கு காதுகளே கிடையாது என்று சொல்கிறார்கள். நீண்ட கால்களும் அகன்ற வாய்களும் தான் இருக்கும் என்கிறார்கள். அந்த நீண்ட கால்கள் என்பது போராடுபவர்களை மிதிக்கும், நசுக்கும்; அகன்ற வாயினை வைத்து பேசி நியாயப்படுத்தும்.
இந்த தர்மமற்ற, இரக்கமற்ற, நிரந்தரமற்ற அதிகாரங்களை ஒழிக்காமல் என் அன்பார்ந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடுக்கமுடியாது
------
புகழ்ச்சியில் வளர்பவனுக்குத்தான்
பிறர் துணை தேவை ......
முயற்சியில் வளர்பவனுக்கு
தன்னம்பிக்கையே
துணை .....!
--------
No tags available