Quotes 2

Published on 28 Jun 2026


ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று 
உணரும் தருணத்தில் 
புத்திசாலியாகின்றன்.
ஒரு புத்திசாலி 
தன்னை புத்திசாலி என்று 
பெருமை கொள்ளும் கணத்தில் 
முட்டாளாகின்றான்  

-----

மனநிறைவு என்பது இயற்கையாகவே 
நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் 
என்பது நாமே தேடிக்கொள்ளும் 
வறுமை 

--சாக்ரடீஸ் 

------

தோல்வி உன்னை 
துரத்துகிறது என்றால்,
வெற்றியை 
நீ நெருங்குகிறாய் 
என்று அர்த்தம் !

--நெப்போலியன் 

------

கைகளுக்கும் 
கால்களுக்கும் 
எவ்வளவு 
வலிமை உண்டு 
என்பதை 
வறுமை 
ஒன்றே 
தீர்மானிக்கிறது 

-----

தொடர் தோல்வியின் 
கடைசி குழந்தையே 
வெற்றியாகும்.

--------

பொறுமை சில நேரங்களில் 
தோல்வியாக தோன்றலாம்;
ஆனால் அது உண்மையான 
வெற்றியை உருவாக்கும் 
விதையாகும்.

-------

மழையும் வெயிலும் இல்லையென்றால் 
குடை என்று ஒன்று இருந்திருக்காது.

அவமானங்களும் தோல்விகளும் 
இல்லையென்றால், உனக்குள் இருக்கும் 
வலிமை என்னவென்று உனக்கே 
தெரிந்திருக்காது.

--------

பழிவாங்கும் 
இடத்தில் இருந்து 
கொண்டு 
மன்னிப்பவனுக்கு 
பெயர்தான் 
மாமனிதன் 

-----

ஓடிக்கொண்டிருக்கும் உலகில் 
ஓய்வெடுக்க முடிவெடுத்தால் 
ஓரமாக ஒதுக்கப்படுவீரே தவிர 
ஒய்யாரமாக உயரமாட்டீர் 

------

நான் தெரிந்துகொள்ள வேண்டியவை 
புத்தகங்களில் இருக்கின்றன.
நான் படிக்காத நூல் ஒன்றை 
எனக்குத் தருபவர்களே 
எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் 

------

ஒரு சாதாரண திருடன் உங்கள் கடிகாரம், கைபேசி,
பை, தங்கச் சங்கிலி அல்லது பணத்தைத் திருடலாம்.
ஆனால் ஒரு அரசியல் திருடன் உங்கள் எதிர்காலம், கல்வி,
உடல்நலம் மற்றும் வேலைவாய்ப்பை பறிக்க முடியும்.
எனவே விழிப்புணர்வுடன் இருங்கள், அறிவைப் பெறுங்கள், சிந்தித்து தேர்வு செய்யுங்கள்.

-------

சமூகத்தின் குறைகளைச் 
சுட்டிக்காட்டுவது 
எதிர்ப்பு அல்ல ;
பொறுப்பு.

-----

மனிதர்கள் எதை 
வேகமாக விரும்பி 
ஏற்கிறார்களோ, அதே 
வேகத்தோடு அதை 
வீசியும் 
எறிகிறார்கள்.  ---ஜெயகாந்தன் 

------

ஒரு புத்தகத்தை திறக்கும்போது 
உலகினை நோக்கிய 
ஒரு சன்னலைத் திறக்கிறோம் ---தோழர் சிங்காரவேலர் 

------

நான் ஓடமாட்டேன் என்பதை 
உணர்ந்ததிலிருந்து,
பேய்கள் என்னைத் 
துரத்துவது கிடையாது.

------

தலைமை என்பது அதிகாரம் அல்ல,
பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் 
துணிவு, முன்னால் நின்று 
வழிகாட்டும் மனம்,
மற்றவர்களுக்கு நம்பிக்கை 
தரும் குணம் !!

------

சக மனிதனிடம் 
தவறாக 
நடந்துவிட்டு 
கடவுளிடம் 
சரியாக நடந்துக் 
கொள்வது 
பயனற்றது 

-----

எல்லாவற்றையும் 
இழந்த பிறகும் 
அமைதியாக நின்று 
கொண்டிருக்கும் 
மனிதனைப் பார்த்தல்,

அவன் தோற்றுவிட்டான் 
என்று நினைக்காதே ;

அவன் இனி 
எதற்கும் பயப்படாத 
நிலையை 
அடைந்துஇருக்கலாம் 

-------

நாம் வாழ்வில் மௌனமாக இருக்க 
வேண்டிய தருணம் 

1. உனக்கு ஒன்று பிடிக்காதபோது 
2. உன்னை யாருக்குமே புரியாதபோது 
3. உன்னை விட்டு பிறர் விலகும்போது 
4. உன்னோடு யாரும் பேசாதபோது 
5. உன்னை பற்றி குறை கூறும்போது 
6. உனக்கு கோபம் வரும்போது 
7. உன்னை மற்றவர் வெறுக்கும்போது 
8. உனக்கு பிரச்சனை வரும்போது 

-----

யாரையும் கேவலமாக 
நினைக்காதே காலம் எப்படி 
வேண்டுமானாலும் மாறும் 
புறக்கணிக்கப்பட்ட பலர் தான் 
இந்த உலகத்தையே உலுக்கிப் 
பார்த்தவர்கள் ..!
---சே குவேரா 

-----

வெற்றி அடையும் வரை முயற்சி 
செய் ! வெற்றி அடைந்த பின் ,
முயற்சி செய்பவனுக்கு உதவி 
செய் ..!

-----

கடந்து போன நிமிடத்தை 
விலைக்கு வாங்கி அனுபவிக்க 
முடிகிற அளவுக்கு இந்த உலகில் 
யாரும் பணக்காரர்கள் 
கிடையாது ...!
------

தனிமை என்பது உன்னைப்பற்றி 
சிந்திப்பதற்கு காலம் உனக்குக் 
கொடுக்கும் ஒரு வாய்ப்பு அதை 
நீ நடந்து முடிந்த செயலை 
நினைத்து வீணாக்காதே ...!

-----புத்தர் 

-------

🏷️ Tags:

No tags available


📰 Related Articles