Published on 24 Apr 2026
உலகத்தில் எம்மொழியும் கற்போம் நாங்கள் வாழ...எங்கள் மொழி தமிழ் கற்போம் எங்கள் இனம் வாழ....
------
Every rejection in life will lead you to a better destination.... Dr. Abdul Kalam
வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நிராகரிப்பும் உங்களை ஒரு சிறந்த இலக்கிற்கே வழிநடத்தும்.
-------
எதையும் இழக்காமல் இங்கு வெற்றி கிடைப்பதில்லை, இழக்காமல் கிடைக்கும் வெற்றி இங்கு நிலைப்பதில்லை.
No victory without Sacrifice
-------
உன் உணர்வுகளை மதிக்காத இடத்தில் ....
உரிமைக்கும் மட்டும் இடமளிக்காதே ....
------
அடிமை தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் மறந்து விடுகிறோம்
-------
ஒரு துண்டு தேங்காயை
திருடிய எலிக்கு விஷம் வைக்க
கற்றுத்தந்த நம்முடைய மூளை
கோடிக்கணக்கில்
திருடுபவனுக்கு
ஓட்டு போடாதே என
கற்று கொடுக்க மறந்து விட்டது.
------
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
-----
ஏன் ntk வில் சேர்ந்தேன் ?
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
----------
இவ்வளவு நாட்கள் என்னுடைய இனத்திற்காகாவும் மொழிக்காகவும் போராடி எவ்வளவு தூரம் இந்த புரட்சி படையை வளர்த்து மேன்மையடைய செய்த என் அண்ணனுக்கும், அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்
-------
ஒரு பொதுஇடத்தில் (கூட்டத்தில்) பேசவேண்டுமெனில், அந்தஇடத்தின் பெருமைகளை கூறி (இயற்கை வளம், மலை, வீரம், வீரர்கள், அதற்கென தனி சிறப்புகளை) கூறி மக்களை பெருமைப்படுத்தி தனது பேச்சினை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் அந்தப்பகுதியின் பாதிப்பை கூறி வருத்தத்தை கூறி ஆரம்பிக்கவேண்டும்.
-------
“I am indebted to my mother & father for giving me life; I am indebted to my elder brother Seeman for teaching me to protect my people.”
“வாழ்வை அளித்ததற்கு என் தந்தைக்கு நான் கடன்பட்டவன்;
என் இனம் காக்க கற்றுத்தந்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கு கடமை பட்டவன்.
------
என்னுடைய தாய் தந்தையர்களே, சகோதிரி சகோதரர்களே, உங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் தாருங்கள், உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் ஒருபோதும் நெறித்தவறமாட்டோம், எங்களுடைய ஊக்கமும் (Motivation), உடல் பலமும் குன்றுவதற்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதே எங்களுடைய ஏக்கம். இந்த பாரதியார் பிறந்த மண்ணில் "கனவு மெய்ப்பட வேண்டும்" நம்முடைய சந்ததிகளுக்கு ஒரு நல்ல வாழ்வாதாரத்தை தந்துவிட்டு செல்லவேண்டும்`
-----
முடிவுரை (speech should end with this kural)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்
----------
Your 'NORMAL' day is someone's dream, so be thankful everyday.
--------
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போலத் துணையாகும்
--------
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்
-------
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
-----------
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்
---------
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை
----------
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
நல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும்
--------
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள்
--------
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்
------
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?
------
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதை விடத் தீமையானது ஆகும்
------
Why ntk not prefer coalition?
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும்
---------
“A friend who brings me hardship and failure is my best friend.”
எனக்கு வறுமையையும் தோல்வியையும் அதிகம் கொடுக்கும் நண்பனே எனது சிறந்த நண்பன்
----------
அறநூல்களை என்னுடைய தாத்தா பாட்டன் கொடுத்தது. 2000 வருடங்களுக்கு முன்பே தொல்காப்பியர் தமிழ் மொழிக்கு இலக்கணம் படைத்தார். நம் நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் எல்லாத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என போட்டான் அடித்தளம். தஞ்சாவூர் கோவிலுக்கு அஸ்திவாரமே மேல இருக்குற கல்லுதான்னு சொன்னான், அந்த கல்லுதான் கோவிலை காக்குதுனான், அதே போல எங்களை அழித்தால் தான் என் தாய் மண்ணின் பெருமையை தொட்டு பாக்கமுடியும், அழிக்கமுடியாது.
நாமெல்லாம் நம் தமிழ்த்தாயின் தோள்களில் பயணம் செய்கிறோம், என் தமிழ்தாய் சொல்றா...மகனே என் இடுப்பில் தூக்கிச்சென்றால் உனக்கு நடக்க தெரியாமல் போய்விடும், நீ வளர்ந்துவிட்டாய் அதனால் என் தோள்களில் பயணம் செய், என்னை வென்றால்தான் உன்னை வெல்லமுடியும், வடாமகனே ஒரு கை பார்ப்போம்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
‘என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்’ என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு, தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன் வந்து உதவி நிற்கும்
இங்கு பிரிவினை என்பார்கள், தேசியம் எனது பாட்டி, தமிழ்தாய் அவளின் 28 மகள்களில் ஒன்று, அதிலும் மூத்தமகள் கொஞ்சம் மிடுக்கு அதிகம்.அதனாலதான் செம்மொழி (classical language) ல தமிழுக்கு (2004) முதலிடம் கொடுத்தான, அதுக்கு அப்புறம்தான் sanskrit (2005), தெலுங்கு (2008), கன்னடா (2008), மலையாளம் (2013), ஓடியா (2014)
அறத்தை காப்பாற்றினால்தான் இனத்தை காப்பாற்றமுடியும். இங்கு நல்லது கெட்டது தெரியாமல் சில குழந்தைகள் வாழ்கிறார்கள்.
UPSC எல்லா மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும், அந்தந்த மாநில மொழியிலே மொழிபெயர்ப்பில் வினாக்கள் இருக்கவேண்டும். ஒரு அரசியல் சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே கண்டிப்பாக ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் இல் இருக்கவேண்டும் ...அப்படி இருக்க
------------
"பழையன கழிதலும் புதியன புகுதலும்"
பழையவை நீங்கியும், புதியவை வந்து சேர்வதும் இயற்கையின் சட்டம்.
மாற்றம் (Change) என்பது தவிர்க்க முடியாதது
-------
"அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது", அதுபோல படிக்கும் காலத்தை வீணடித்தால், காலம் திரும்ப வராது குழந்தைகளே.
நாம் எல்லாவற்றையும் இழந்து இந்த மலை வளம், மண் வளம், நீர் வளம், விலங்கினங்கள், தாவரங்கள் எல்லாவற்றையும் இழந்து பின்பு நம்முடைய தலைமுறைகளை திசை தெரியாமல் விட்டுப்போவது, இந்த மனசாட்சி உருத்தலயா
---------------
"எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற" மாதிரி என்னுடைய தாய் தந்தைகளுக்கு, என்னுடைய சகோதரர் சகோதிரிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இன்றைய நிலையை சொல்லி ஒரு மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியாதான்னு ஒரு ஏக்கம்தான். உங்களுடைய தன்மானத்தையும், உரிமையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்
----------------
"உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்" நீ படிக்கலன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்க.
-----------------
"சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?"
-----------------
"இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்"
------------------
நாகரிகம் – Civilization
Refers to external development of society
Lifestyle, infrastructure, technology
Cities, roads, governance, systems
How “advanced” a society looks outwardly
சமூகத்தின் வெளிப்புற முன்னேற்றம்
பண்பாடு – Culture (நம்முடைய பண்பாட்டை காப்பாற்றுவது ஒவொவொருவரின் தலையாய கடமை)
Refers to way of life and behavior
Traditions, customs, language, art
Food habits, dress, festivals
Social values and practices
மக்களின் வாழ்வியல் முறையும் நடத்தைமும்
பாரம்பரியம் – Heritage / Tradition
Refers to what is inherited from ancestors
Old customs passed generation to generation
Temples, rituals, ancient practices
Historical legacy
முன்னோர்களிடமிருந்து வந்த மரபு
------
Bruce Lee
“Be like water making its way through cracks.”
“பிளவுகளுக்குள் வழி கண்டுபிடிக்கும் நீரைப் போல இரு.”
------
“You are not a drop in the ocean. You are the entire ocean in a drop.”
“நீ கடலில் ஒரு துளி அல்ல; ஒரு துளிக்குள் முழு கடலும் நீயே.”
------
என்னுடைய பெருமைக்குரிய தாய் தந்தையர்கள், உடன்பிறவா சகோதர சகோதிரிகள் மன்னித்தும் விடுவார்கள், மறந்தும் விடுவார்கள்.நம்முடைய அறநெறி நூல்கள் கற்பித்தது அவைதானே
--------
கொடுக்க முடியாது என்று தெரிந்து வெற்று வாக்குறுதியை கொடுப்பதுதான் மக்கள் துரோகம், மக்கள் விரோதம், ஏமாற்று.
--------
"மக்கள் ஒருபோதும் அறிவு தலைமையை தேடமாட்டார்கள், கவர்ச்சியை நோக்கித்தான் ஓடுவார்கள். கவர்ச்சியால் உருவாக்கப்பட்ட சமூகம், ஒருபோதும் அறிவு சமூகத்தை படைக்காது" ஹிட்லர்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிரியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும் or பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
-------
லட்சியத்தில் உறுதிகொண்டு ஒன்றுபட்ட மக்களை எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது பேரன்புக்குரியவர்களே
-------
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்
--------
நாங்கள் கட்சி தொண்டர்கள் அல்ல, நன்கு கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தின் வீரர்கள்.
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர்
-------
ஆல் மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு வந்த அரசியல் வாதிகள் அல்ல, அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கு வந்த புரட்சியல்வாதிகள்.
-------
பூனைகள் புலிகளை விட வலிமையானது என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொவதில்லை.
--------
விடியாத இரவொன்றும் கிடையாது; அடையமுடியாத இலகொன்றும் கிடையாது.
---------
நாங்கள் கலைகிற கூட்டமல்ல, விளைகிற கூட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
--------
காற்றடிக்கும் திசைகளில் எல்லாம் பறக்கும் பதறுகள் அல்ல, புயலே அடித்தாலும் அதே இடத்தில் அசையாமல் இருக்கும் வீரியமிக்க மணிகள்.
---------
"அதிகாரம் மிக வலிமையானது" அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார். ஆனால் அதே அதிகாரம் நிலையானது அல்ல. ஆனால் ஏற்று இருக்கும் தத்துவ நிலைப்பாடும் கோட்பாடும் தான் நிலையானது, மாறாதது.
--------
வரலாறு வழிகாட்டும்.
--------
விமர்சனங்களை கடக்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை தாங்க முடியாதவன் அற்ப வெற்றியைக்கூட தொடமுடியாது.
-------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
-------
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்
------
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
ஆற்றுவார் மேற்றே பொறை.
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
-----
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். (திரள் நிதி)
ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும் or நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
-------
கற்றுக்கொள்வதை நிறுத்தும் நேரத்தில், வளர்ச்சியும் நிற்க ஆரம்பிக்கும்
இலக்கு தெளிவாக இருந்தால், பின்னோக்கிப் பார்ப்பதற்கு நேரமிருக்காது
அறிவில் செய்யும் முதலீடே, வாழ்க்கையில் அதிக லாபம் தரும் முதலீடு
முயற்சியை நிறுத்தாதவரை, தோல்வி நிரந்தரமானது அல்ல; தொடர்ந்து முயன்றால் வெற்றி நிச்சயம் - ஐன்ஸ்டின்
செலவழித்த பிறகு மீதமுள்ளதை சேமிக்காதீர்கள்; சேமித்த பிறகு மீதமுள்ளதை செலவழியுங்கள் - வாரன் பூபட்
பயத்தை வென்றவன் உலகத்தை வெல்லலாம் - நெல்சன் மண்டேலா
வெற்றி இறுதி அல்ல, தோல்வி முடிவு அல்ல; தொடர்ந்து முன்னேறும் துணிவே முக்கியம்
கவலை உன்னை நிறுத்தும்; செயல் உன்னை முன்னேற்றும்
நீ தொடர்ந்து சிந்திப்பது தான் உன் வாழ்க்கையாக மாறும்
திறமை என்பது பிறப்பில் வருவது அல்ல, வளர்த்துக்கொள்வது - அரிஸ்டோடில்
நீ இன்று உழைக்கும் கஷ்டம் தான், நாளை உன் வெற்றியின் காரணமாக மாறும் - அப்துல் கலாம்
பெரிய வெற்றிக்கு முன் பெரிய கஷ்டம் வரும் - ரத்தன் டாடா
நீ உன்னை நம்ப ஆரம்பித்தால், வாழ்க்கை உனக்கு வழி காட்ட ஆரம்பிக்கும் - அப்துல் கலாம்
கற்பனை அறிவை விட பெரியது - ஐன்ஸ்டின்
நீ தேடுவது, உன்னையும் தேடிக்கொண்டிருக்கிறது - ரூமி
-------
இங்கு நடிப்பவனுக்கு கிடைக்குற அந்தஸ்து படித்தவனுக்கு கிடைப்பதில்லை....காரணம் ....படித்தவனே நடிப்பவனை நாடாள அழைப்பதுதான் .....
------
அழுகிய பழங்கள் தானாக கீழே விழும்
-------
பசிக்கு கை நீட்டி
கேட்பவர்களுக்கு
சில்லறை காசு .....
பசிக்காத கடவுளுக்கு
ரூபாய் நோட்டில்
அலங்காரம் செய்யும்
சமூகம் இது ....
---------
தோற்றவன் பின்னால் செல்லுங்கள்
நிறைய கற்றுக்கொடுப்பான்
வெற்றி பெற்றவன் பின்னால்
சென்றால் உன் தவறை காட்டிக்
கொடுப்பான் ...
------
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவுமோர் நோய்
சொந்த புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
-------
வெற்றி அடையும் வரை முயற்சி
செய் ! வெற்றி அடைந்த பின்
முயற்சி செய்பவனுக்கு உதவி
செய்
---விவேகானந்தர்
-------
யாரையும் கேவலமாக
நினைக்காதே காலம் எப்படி
வேண்டுமானாலும் மாறும்
புறக்கணிக்கப்பட்ட பலர் தான்
இந்த உலகத்தையே உலுக்கிப்
பார்த்தவர்கள் ....!!
----சே குவேரா
-------
வார்த்தைகளில் உள்ள கருணை
நம்பிக்கையை உருவாக்குகிறது.
சிந்தனையில் உள்ள கருணை ஆழ்ந்த
அறிவை உருவாக்குகிறது.
கொடுத்தலில் உள்ள கருணை அன்பை
உருவாக்குகிறது...
---------
எண்ணமும் உன்னுடையது
நம்பிக்கையும் உன்னுடையது
முயற்சியும் உன்னுடையது
வெற்றியும் உன்னுடையது
தோல்வியும் உன்னுடையது
இவை ஐந்தும் உன்னுடையதாக இருக்கும்போது
மற்றவர்களிடம் இருந்து வரும்
ஒற்றை "விமர்சனத்தை" மட்டும் ஏன் பெரிதாக பார்க்கிறாய்...
-------
பயத்தின் முடிவே,
வெற்றிக்கான ஆரம்பம்;
எதையும் விட்டு விடாதே
கற்றுக்கொள் ....
------
என் அன்பு தாய் தந்தையர்களே, சகோதிரி சகோதரர்களே ...
சாலையில்
பொம்மை விற்பவனிடம்
கொஞ்சம் கவனமாய்
பேரம் பேசுங்கள் ...
உங்கள் குழந்தை
பொம்மைக்கு அழுகிறது
அவன் வீட்டில்
அவன் குழந்தை
பசியால் உணவுக்கு அழுகிறது...
நாம் பிரபாகரனின் வீர மறவர்கள் ...பிறரையும் வாழவைப்போம், நாமும் வாழ்வோம்
-------
கடைசிவரை நம்பிக்கை இழக்காதீர்கள்,
ஏனெனில் கடைசி வரியில் கூட உங்களுக்கான
வெற்றி எழுதப்பட்டிருக்கலாம் ...!!!
-------
உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்
நேர்மை இருக்கும் இடத்தில்
நல்ல நடத்தை இருக்கும்
அதிக அன்பு இருக்கும் இடத்தில்
கோபம் இருக்கும்
--------
நாம் நினைத்ததை அடைய,
நாம் நினைத்துப் பார்த்ததை
விட அதிகம் "உழைக்க"
வேண்டும் .....
---------
If you want to walk fast, walk alone...
But, if you want to walk far, walk together...
- Ratan Tata
--------
சரித்திரம் ஒரு
முறை உன் பேரைச்
சொல்லவேண்டும்
என்றால் நீ பல
முறை என்னிடம் வர வேண்டும்
இப்படிக்கு "முயற்சி"
---------
“வென்றவர் தோற்பர்; தோற்றோர்
வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்
உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘
என்றனர் அறிஞர் அன்றே!
ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான்
நமது உயிர்துடிப்பைக் காட்டுபவை.
அதேபோல வாழ்க்கையில்
நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை
தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.----Ratan Tata
-----------
யோசிக்காமல் எடுத்த முடிவுகள்
அனைத்தும்
யோசிக்க வைத்துக் கொண்டே
இருக்கிறது...!
---------
உன் பின்னால்
இருப்பவர்களுக்கு தெரியாது
நீ வகுத்த பாதை எத்தனை
கடுமையானது என்று...!
-------
விதைத்தவன்
உறங்கலாம்.
ஆனால் விதைகள்
ஒருபோதும்
உறங்குவதில்லை.
--பிடல் காஸ்ட்ரோ
-------
நதி ஓடும் திசையில் எல்லோராலும்
பயணம் செய்ய முடியும். ஆனால்
திறமை உள்ளவர்களால் மட்டுமே
எதிர்திசையில் பயணம் செய்ய முடியும்.
வாழ்க்கையில் தோற்றவர்கள் இரு வகை
ஒன்று யார் பேச்சையும் கேட்காதவர்கள்.
இரண்டு எல்லார் பேச்சையும்
கேட்பவர்கள்.
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை
தேவை இல்லை. பிரச்சனையை சந்திக்க
தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.
பிறருடைய மனதைக் கவர்வது
நம்முடைய அறிவோ, அழகோ அல்ல.
நாம் பழகும் விதமும், பிறரை நாம்
மதிக்கும் விதத்தில் தான் அமையும்.
அடுத்தவர் கற்பனைகளுக்கு நாம் பதில்
சொல்ல அவசியம் இல்லை. நம்மை
பற்றி நமக்கு தெரியாததா அவர்களுக்கு
தெரியப் போகிறது.
----------
எல்லாம் முடிந்ததென சோர்வடையும்
போது....சில நிமிடம் எட்டிப்பார்க்கும்
சிறு தைரியத்தை பிடித்துக்கொண்டு
மேலே வந்துவிடுங்கள்...நாளை
நமக்கென மாறலாம்...!
---------
வாய்ப்பை இழந்தோர் வருத்தப்படுகிறார்கள்
வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்
வாய்ப்பை உருவாக்குவோர் வெற்றி பெறுகிறார்கள்
-------
நாம் எதிலும்
தோற்பதே இல்லை ...
ஒன்று வெற்றி
கொள்கிறோம்.
இல்லை.....
கற்றுக் கொள்கிறோம்.
--------
குறிக்கோளை விட்டு
கவனத்தை சிதற விட்டுவிடாதே
வெற்றிக்கான சிறந்த வழியே
குறிக்கோளை விட்டு விலகாமல்
இருப்பதுதான்...!
--------
ஒரு கோமாளி
அரண்மனைக்குச் சென்றால்,
அவன்
அரசனாகி விடுவதில்லை.
அரண்மனைதான்
சர்க்கஸ் கூடாரமாகிவிடும்
--துருக்கிய பழமொழி
-------
"நல்லதை நினைவுபடுத்திக்
கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
கெட்டது தானே ஒட்டிக்கொண்டுவிடுகிறது "
--------
பயிற்சி இல்லாத அறிவு
பயனற்றது.
அறிவு இல்லாத பயிற்சி
ஆபத்தானது.
--------
கலை பத்தில் தலை சிறந்தவன்
திசை எட்டும் புகழ் கொண்டவன்
எங்கள் பெரும்பாட்டன் ராவணன்...
--------
உன் திறமையை
சந்தேகிக்காதே,
உன் முயற்சியை நிறுத்தாதே,
நேரம் வரும்போது, உன்
வெற்றியே உனக்காக பேசும்.
------