Published on 24 Apr 2026
Mahatma Gandhi
“Be the change that you wish to see in the world.”
“நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாற வேண்டும்.”
-----------
Nelson Mandela
“It always seems impossible until it’s done.”
“ஒரு செயல் முடியாததாகத் தோன்றும்… அது நிறைவேறும் வரை.”
------------
Abraham Lincoln
“Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.”
“மக்களால், மக்களுக்காக, மக்களுக்கான அரசு இந்த உலகிலிருந்து அழியாது.”
------------
Theodore Roosevelt
“Believe you can and you're halfway there.”
“நீ செய்ய முடியும் என்று நம்பு; நீ பாதி வழி வந்துவிட்டாய்.”
--------------
Subhas Chandra Bose
“Give me blood, and I shall give you freedom!”
“எனக்கு இரத்தம் கொடு; நான் உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பேன்!”
------------
"தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார்.
------------
உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை. எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை.
-----------
தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென
முயலுநர் உண்மையானே (புறம் - 182)
என்னும் புறநானூற்று அடிகள் உணர்த்துகின்றன.
---------
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" வள்ளலார்
----------
வாழ்க்கை என்பது
நீ சாகும்வரை அல்ல
மற்றவர் மனதில்
நீ வாழும் வரை
- அன்னை தெரசா
--------
என் முயற்சிகள் என்னை
பலமுறை கைவிட்டதுண்டு ....
ஆனால், நான் ஒரு முறை கூட
முயற்சியைக் கைவிடவில்லை !
- தாமஸ் ஆல்வா எடிசன்
-------
மௌனம்
ஒரு பலவீனம் அல்ல....
எல்லாவற்றையும்
பார்த்த பிறகு
வரும் முதிர்ச்சி
- காமராஜர்
-------
அவமானமும் அனுபவமும் தான்
வாழ்க்கையில் மிகசிறந்த ஆசான்.
அவை கற்றுக் கொடுக்கும்
போதனையை எந்த விலை உயர்ந்த
புத்தகமும் கற்றுக் கொடுக்காது
-புத்தர்
--------
ஒழுங்காக சம்பாதித்துப்
பணக்காரவணானவனும் குறைவு
உண்மையைப் பேசிப்
பதவிக்கு வந்தவனும் குறைவு
-கண்ணதாசன்
------
ஒரு நாட்டை அழிக்க விரும்பினால்
அங்குள்ள இளைஞர்களின்
சிந்தனையை அழையுங்கள் நாடு
தானாக அழியும்
- விளாடிமர் லெனின்
-------
அநீதிக்கு எதிராக
உங்கள் இதயம்
பற்றி எரியவில்லை எனில்,
உங்கள் வசதி
உங்களின் சிறையாகும்
- சே குவேரா
-------
உன்னை அதிகம் விமர்சிப்பவன்
உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான் - பிடல் காஸ்ட்ரோ
----------
ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுத்தால்
முதல் நான்கு மணி நேரத்தை
கோடாரியை கூர்மை படுத்தவே செலவிடுவேன்
----ஆபிரகாம் லிஙகன்
-------
கடலில் பயணத்தை
தொடங்கும்போது
கரைகள் மறைகிறதே என
அச்சப்படக்கூடாது;
கரைகளை கடக்கும்
துணிவிருந்தால் தான்
பல கடல்களை உங்களால்
கண்டுபிடிக்க முடியும்
---அப்துல் கலாம்
--------
ஒவ்வொரு பெருஞ் செல்வத்திற்கு
பின்னாலும் ஒரு பெருங்குற்றம்
ஒளிந்திருக்கிறது
-----காரல் மார்க்ஸ்
--------
உன் முயற்சிகளை கைவிடாதவரை,
நீ தோல்வி அடைந்தவன் கிடையாது.
-------
ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும் ---ஆபிரகாம் லிங்கன்