Published on 18 Apr 2026
"நன்றி ஈது” என்று கொண்டால், நயத்தினை நய்ந்து, வேறு
வென்றியே ஆக, மற்றுத் தோற்று உயிர் விடுதல் ஆக,
ஒன்றிலே நிற்றல் போலாம், உத்தமர்க்கு உரியது; ஒல்கிப்
பின்றுமேல், அவனுக்கு அன்றோ, பழியொடு நரகம் பின்னை?
-கம்பராமாயணம்
-----------------
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
---------
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை
-------
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
கூற்றம் (எமன்) சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும்
------
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
-------
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
தேய்ந்து சிறுகுதலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்!
-------
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். (யாரை சொல்கிறேன் என்பதை நீங்கள் உணரமுடியும்)
நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்
--------
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள். (அந்த படைதான் நாம் தமிழர் கட்சியின் படைகள்)
-------
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.
------
மண்ணின் திணிவாக இருக்கும் நிலம்
இந்த நிலத்தை ஏந்திக்கொண்டிருக்கும் விசும்பு
இந்த விசும்பைத் தடவிக்கொடுக்கும் காற்று
காற்றில் பற்றி எரியும் தீ
தீயோடு மாறுபட்டிருக்கும் நீர்
இவை ஐம்பெரும் பூதங்கள்
இவற்றின் இயற்கைப் பாங்குகளை நீ ஒத்திருக்கிறாய்
(எங்க அண்ணனை ice வைக்கல...எங்க அண்ணன் அதெற்கெல்லாம் மயங்க மாட்டார்கள். இருந்தாலும் எங்கள் அண்ணனுக்கு நாங்கள் புகழாரம் சூட்டாமல் வேறு யார் சூட்டுவது.)
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
உன்னைப் போற்றாதவர்களை நிலம் போலப் பொறுத்துக்கொள்கிறாய்
விசும்பு போல் சூழும் பரப்பளவு உனக்கு உண்டு.
காற்றைப் போல் உனக்கு வலிமை
தீயைப் போல் பகைவரை அழிக்க வல்லவன் நீ
நீரைப் போல் வழங்கும் கொடைத்திறம் உடையவன் நீ
உன் கடலிலே தோன்றிய ஞாயிறு
உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ.
இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா?
தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில்
இருபாலாருக்கும் பெருஞ்சோறு கொடுத்தவன் நீ.
பால் புளித்தாலும்,
பகல் இருளினாலும்,
நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும்
திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக.
இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில்
அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில்
நவ்வி-மான்கள் உறங்குவது போல
அச்சமின்றி உன் நாட்டு மக்கள்-சுற்றம் நிலைகொள்வதாகுக.
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
---------------