Published on 23 May 2026
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்
------
“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”
ஒரே குடும்பத்தில் பலர் இருந்தாலும், வயதில் மூத்தவரை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், அறிவும் கல்வியும் உடையவரின் வழியில்தான் அரசும் சமூகமும் செல்லும் என்பதே இதன் பொருள்.
இந்த வரிகள் புறநானூறு நூலில் வரும் புகழ்பெற்ற பாடல் ஆகும்.இதைப் பாடியது பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
--------
பல கற்றோம் யாமென்று தற்புகழ்
வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும்
காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம்
பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
---நாலடியார்
எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும் அகந்தை கொள்ளக்கூடாது.
குறைவாகக் கற்றவர்களிடமிருந்தும் நல்ல அறிவு அல்லது பயனுள்ள கருத்து கிடைக்கலாம்.
சிறிய குடை சூரிய ஒளியை மறைப்பது போல, சிறியவரின் ஒரு சொல் கூட பெரிய அறிவாளிக்கு உதவியாக இருக்கலாம்.
---------
உன் படிப்பு,
உன் கனவுகள்,
உன் உழைப்பு,
உன் முன்னேற்றம்,
உன் ஆரோக்யம்
இதை நோக்கி
கவனத்தை செலுத்து
--------
நீங்கள் தங்கமாகவே இருந்தாலும்
சரியான இடத்தில் இல்லையெனில்
உங்களுக்கு மதிப்பு இல்லை
-------
ஒருபோதும் பிரச்சனைகளில் இருந்து
தப்பிக்க நினைக்காதீர்கள் ....
ஏனெனில் வெற்றி எப்போதும் சவால்களில்
மறைந்து கிடக்கும்..!
-------
விலைமதிக்க முடியாத
சந்தோசத்தை
வேறு யாரிடமும் தேடாதே ....
அது உன்னிடத்தில்
தான் உள்ளது ...!
-------
உங்களுடைய தவறுகளை
உங்களிடமே சொல்பவர்களை
இழந்துவிடாதீர்கள் ...
நீங்கள் மற்றவர்களிடம்
தலைகுனிய கூடாது என
எண்ணுபவர்கள் அவர்கள் ...
------
சீனாவில் பள்ளி
குழந்தைகளுக்கு
காணொளி வாயிலாக
தந்தை கஷ்டப்படுவதை
சொல்லி வளர்க்கும்
சீனா அரசு
------
யாருடனும் உன்னை ஒப்பிடாதே
அவன் பாதை வேறு
உன் பாதை வேறு
இருவர் பிறப்பின் நோக்கமும் வேறு ....
------
Focus on Career
Because at the end
people don't see
your heart, they
see your success.
---------
The wrong people always teach you the right life lessons.
-------
பத்து தலைமுறையின் ஏழ்மையை
ஒற்றை தலைமுறையில் மாற்றும்
வல்லமை கொண்ட ஆயுதம்
"படிப்பு "
எப்பாடு பட்டாவது படிச்சிடுடா தங்கை தம்பிகளா
--------
Difficult roads always lead to Beautiful Destination
-------
யாரும் நினைத்து கூட
பார்க்காத
உயரத்திற்கு
செல்ல ஆசைப்படு
-------
விழையும் பொருள் எதுவும்
தானாக வீடு வந்து
நுழையும் எனக் கருதும்
நோக்குடையன் அல்லேன்
என் பயணம் பெரிது
செல்லும் பாதை நெடிது
வழி துயரம் தவிர்க்க
துணை தேடேன்
என் படைக்கு
ஒரு சிலரும் போதும்
நான் ஒருவனே போதும்
....கிறிஸ்துவ குரு கூறியது
------
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து ---திருக்குறள்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு -----ஒளவையார்
-------
தகுதிக்கு மீறி நீ ஆசைப்படு
ஏனெனில் அப்போதுதான் உன்
தகுதியை வளர்த்துக் கொள்ள
முயற்சி செய்வாய் ...
-------
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச
காத்திருக்கும் நிலையை உருவாக்கு
அதுவும் ஒருவகை வெற்றி தான்
-----
அறிவு மேன்மையானது...இருப்பினும் தைரியத்தினால்தான் பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.
------
To succeed
--------------
நீ உறங்கி
கொண்டு இருந்தாலும்
உனக்கு
வருமானம் வரக்கூடிய வாய்ப்பை
நீ ஏற்படுத்திக்கொள்ள ....
-------
எதையும் சாதிக்க விரும்பும்
மனிதனுக்கு நிதானம்தான் அற்புதமான
ஆயுதமே தவிர கோபம் அல்ல...
-------
கிழிந்த
புத்தகத்தில் கூட
நீங்கள் உயர்ந்து வாழ
ஒரு சில வரிகள் இருக்கும்
ஒரு முறையேனும்
படித்துப்பார் ...!
-------
கடவுளுக்கு தரும்
காணிக்கையை விட
ஒரு ஏழைக்கு தரும்
கல்வி மேலானது
---------
ஊக்குவிக்க ஆள்
இருந்தால் ஊக்கு
விற்பவனும்
தேக்கு விற்பான்
--------
உன்னை
நீயே
செதுக்கிக்
கொள்ளும்
சிற்பியாய் இரு
--------
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!” (புறநானூறு – 183)
பொருள்:
ஆசிரியருக்கு தேவையான உதவிகளைச் செய்து, பொருள் கொடுத்து, அவர் கண்டித்தாலும் கோபப்படாமல் கல்வி கற்பது சிறந்தது.
-------
Don't wait for perfect
opportunity
create it by taking action
today....
-------
பயிற்சி இல்லாத அறிவு
பயனற்றது.
அறிவு இல்லாத பயிற்சி
ஆபத்தானது.
-------
கஷ்டமே தெரியாமல்
குழந்தைகளை
வளர்க்கிறார்கள்....
ஆனால் அந்த குழந்தை
வளர்ந்த பிறகு,
நிறைய தெரிந்துகொள்ள
கஷ்டப்படுகிறது.
-------
“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” (புறநானூறு – 312)
பொருள்:
மகனை நல்லவனாக வளர்ப்பது தந்தையின் கடமை; மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்குவது அரசனின் கடமை.
------
ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும் ---ஆபிரகாம் லிங்கன்
-----
உன் திறமையை
சந்தேகிக்காதே,
உன் முயற்சியை நிறுத்தாதே,
நேரம் வரும்போது, உன்
வெற்றியே உனக்காக பேசும்.
-----
நீதிவெண்பா
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று
அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.
------
‘சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே ’
- சீவகசிந்தாமணி
நெற்பயிர், கருவுற்ற பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு, செல்வம் சேர்ந்தவுடன் பண்பற்றமக்கள் பணிவின்றித் தலை நிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.
--------
One moment has the power to create history
One idea has the power to inspire millions
One person has the power to change a nation..
You
You have the power of one.
No tags available