House sparrow

Published on 13 Apr 2026


சிட்டுக்குருவி

சி ட் டு க்கு ருவி கூ டு க ட் டி வா ழு ம் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.  தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.ஆல், அரசு போன்ற மரங்களையும் அ வ ரை , பு டலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
அதனால்தான் "காக்கைகுருவி எங்கள் சாதி" - என்று பாரதியார் பாடினார். 

மனிதன் இல்லாத உலகில் பறவைகள்
வாழமுடியும்!
பறவைகள் இல்லாத உலகில் மனிதன்
வாழமுடியாது!

என்கிறார் பறவையியல் ஆய்வாளர்சலீம் அலி.

Abraham Lincoln

“You cannot escape the responsibility of tomorrow by evading it today.”
“இன்றைய பொறுப்புகளைத் தவிர்ப்பதனால், நாளைய பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது.”

(இன்று செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புகள், வேலைகளை நாம் தவிர்த்து விட்டால்,
அவை மறைந்து போய்விடாது — நாளைக்கு மேலும் அதிகமாக திரும்பி வரும். பொறுப்புகளை தள்ளிப்போடுவது (procrastination) பிரச்சினைகளை அதிகப்படுத்தும். இன்று செய்யாத வேலை, நாளை சுமையாகவும் அழுத்தமாகவும் மாறும்)

🏷️ Tags:

No tags available


📰 Related Articles

No related articles found