Brave Tamil mother

Published on 24 Apr 2026


தமிழ்த்தாயின் வீரம் 

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் 
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் 
யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும் 
புலிசேர்ந்து போகிய கல்அளை போல 
ஈன்ற வயிறோ இதுவே 
தோன்றுவான் மாதோ போர்க்களந் தானே 

-காவற்பெண்டு 

காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெ ரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.

விளக்கம் 

எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று
என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே!
அவனிருக்கும் இடம் யானறியேன்;
புலி தங்கிச் சென்ற குகை போல 
அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது;
ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்!

🏷️ Tags:
bravenessmother

📰 Related Articles