Published on 21 May 2026
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்.
விளக்கம்
இமயமலையின் உச்சிவரை சென்று நாட்டின் பெருமையை அனுபவிப்போம்.
உலக நாடுகளுடன் கடல் வாணிபம் செய்வோம்.
கல்வி நிலையங்களை கோயில்களைப் போல புனிதமாகக் கருதுவோம்.
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்
விளக்கம்
கங்கை போன்ற நதிகளின் நீரை வீணாக்காமல் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று விவசாயம் செய்வோம் என்கிறார்.
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறுபல பொருளும் குடைந்தெடுப்போம்
எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவருவோம்
விளக்கம்
நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி தொழில்துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
உலக நாடுகளுடன் வாணிபம் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்கிறார்.
No tags available